Published : 12 Sep 2020 08:15 AM
Last Updated : 12 Sep 2020 08:15 AM
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையில் திமுக ஏன் நவீன தீண்டாமையை பின்பற்றுகிறது என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கேள்வி எழுப்பினார்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் மாவட்ட அளவிலான பாஜக முதல் செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது, செய்தியாளர்களிடம் எல்.முருகன் கூறியதாவது:
புதிய கல்விக் கொள்கையை வரவேற்று பாஜக சார்பில் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை தொழில் கல்வியை ஊக்குவிக்கிறது. தாய்மொழி கல்வியை ஊக்குவிக்கிறது. மாணவர்களை சர்வதேச தரத்துக்கு உருவாக்குகிறது.
ஏற்கெனவே தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. எஸ்சி, எஸ்டி மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பயிலும் அரசுப் பள்ளிகளில் மட்டும் மும்மொழிக் கொள்கை இல்லை. இந்த நவீன தீண்டாமையை ஏன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பின்பற்றுகிறார்?
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக கணிசமான எண்ணிக்கையில் சட்டப்பேரவை உறுப்பினர்களை பெறும். திமுகவில் இருந்து பல தலைவர்கள் பாஜகவில் இணைய உள்ளனர். மத்திய அரசு விவசாயிகள் பயன்பெற கொண்டுவந்த கிசான் திட்டத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து தமிழக அரசு சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைத்து விசாரிக்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT