Published : 11 Sep 2020 05:54 PM
Last Updated : 11 Sep 2020 05:54 PM
‘‘இந்தி தெரியாது போடா என்றால் நீ படிக்காமல் போ என்று நான் சொல்வேன்,’’ என பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
கரோனா காலத்தில் மத்திய அரசு கொண்டு வந்த மக்கள் நலத் திட்டங்களை விளக்கி தமிழ்நாடு ஏகத்துவ ஜமாஅத் சார்பில் குமரி முதல் சென்னை மெரினா வரை தொடர் பிரசார யாத்திரை நடந்து வருகிறது.
காரைக்குடியில் நடந்த பிரசார நிகழ்ச்சியில் பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா பங்கேற்று பேசினார்.
பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "பிரதமர் கிசான் திட்டத்தில் ஊழலில் ஈடுபட்டவர்களை பொதுமக்கள் முன்னிலையில் சவுக்கால் அடிக்க வேண்டும். மேலும் அவர்களது கழுத்தில் மக்கள் விரோதிகள் என எழுதிய அட்டையை தொங்கவிட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்ல வேண்டும்.
திமுகவில் தற்போது யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. கனிமொழி, ஆ.ராசா ஆகிய இருவரும் தாங்கள் தனிமை படுத்தப்பட்டுவிட்டதாக எண்ணுகின்றனர்.
இந்தி தெரியாது போடா என்று சிலர் கூறுகின்றனர். என்னிடம் அப்படிக் கூறினால் நீ படிக்காமல் போ என்று நான் கூறுவேன். தேசிய கல்விக் கொள்கையில் எந்தவொரு பாடத்திட்டமும் அனைவருக்கும் சமமாக இருக்கும். அதில் தமிழ் கற்பிப்பு மொழியாக இருக்கும்.
தேசியக் கல்வி கொள்கையில் அனைத்து மொழிகளும் இருப்பதால் அது பன்முகத் தன்மை கொண்டதாக உள்ளது. மேலும் திருமாவளவன் ஒரு சமூக விரோதி அவரை அரசு நடமாட விடக் கூடாது" என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT