Published : 11 Sep 2020 05:23 PM
Last Updated : 11 Sep 2020 05:23 PM
மதுரையில் பிரேசில் நாட்டு ரூபாய் நோட்டுக்களை மாற்ற முயன்ற மதுரையைச் சேர்ந்த பெண் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.53 லட்சம் (இந்திய மதிப்பு) பறிமுதல் செய்யப்பட்டது.
மதுரை திலகர்திடல் காவல் ஆய்வாளர் சுஜாதா தலைமையில் போலீஸார் நேற்று மாலை ரயில் நிலையம், மீனாட்சி பஜார் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஆர் எம்எஸ் ரோட்டில் 7 பேர் கும்பல் சந்தேகத்துக்குரிய வகையில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்த போது, முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர்.
அவர்கள் திருவாரூரைச் சேர்ந்த கருணாமூர்த்தி (35), புதுக் கோட்டை ராஜேந்திரன் (43), சிவகங்கை திருமாவளவன்(60), திருப்பூர் ராமர் (64), உதயகுமார் (32), மதுரையைச் சேர்ந்த தர்மராஜ் (45), மகாலட்சுமி (31) எனத் தெரிந்தது.
கருணாகரன் வைத்திருந்த பையை ஆய்வு செய்தபோது, பிரேசில் நாட்டைச் சேர்ந்த (ரியால்) ரூ.3.85 லட்சம் மதிப்புள்ள 1000 ரூபாய் நோட்டுக்கள் கட்டுக் கட்டாக இருப்பது தெரியவந்து.
கமிஷனுக்காக சட்டவிரோதமாக அந்த ரூபாய் நோட்டுக்களை மாற்ற அவர்கள் திட்டமிட்டு இருந் ததும் தெரிந்தது. இது தொடர்பாக 7 பேரையும்திலகர்திடல் போலீஸார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து பிரே சில் நாட்டு ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது இந்திய மதிப்புக்கு சுமார் ரூ. 53 லட்சம் இருக்கும் என, போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும், இது பற்றி போலீஸார் கூறியது; நாகை மாவட்டம், வேதாரணயத்தைச் சேர்ந்த ஒருவரிடம் இருந்து இந்த ரூபாய் நோட்டுக்களை கருணாகரன் பெற்றுள்ளதாக தெரிகிறது. கமிஷன் அடிப்படையில் இந்த நோட்டுக்களை மாற்ற திட்டமிட்ட அவர் ராஜேந்திரனை அணுகியுள்ளார்.
அவர் மூலம் திருமாவளவன், ராமர், உதயக்குமார் ஆகியோர் சேர்ந்து தேனி மாவட்டம், கம்பத் தில் இந்த நோட்டுக்களை மாற்ற முயன்றுள்ளனர். அங்கு முடியாத நிலையில், மதுரையைச் சேர்ந்த தர்மராஜ், மகாலட்சுமி மூலமாக மதுரையில் மாற்ற முயன்றபோது தான் சிக்கினர்.
இது போன்ற வெளிநாட்டு ரூபாயை நோட்டுக்களை கமிஷனுக்காக சட்டவிரோதமாக மாற்றும் கும்பலாக இவர்கள் இருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது.
இவர்கள் பின்னால் இருக்கும் நெட்வோர்க் பற்றி விசாரிக்கப்படும். பறிமுதல் செய்யப்பட்ட பிரேசில் நாட்டு ரூபாய் நோட்டுக்கள், அந்த நாட்டில் மதிப்பிழப்பு செய்யப்பட்டது என, தெரிகிறது.
இருப்பினும், அது உண்மையா என, விசாரிக்க வேண்டும். ஆன்லைனில் ஆய்வு செய்தபோது, தற்போது புழக் கத்தில் இல்லாமல் இருப்பது போன்ற சில தகவலும் கிடைக் கிறது. இருப்பினும் முழுமையான ஆய்விற்கு பின்னரே தெரியவரும், என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT