Published : 11 Sep 2020 01:16 PM
Last Updated : 11 Sep 2020 01:16 PM

தமிழகத்தில் அடுத்து பாஜக ஆட்சியை பிடிக்கும்: காயத்ரி ரகுராம் நம்பிக்கை

ராமேசுவரத்தில் செய்தியாளர்களை சந்தித்த காயத்ரி ரகுராம்.

ராமேசுவரம்

தமிழகத்தில் அடுத்து பாஜகதான் ஆட்சியைப் பிடிக்கும் என அக் கட்சியின் கலை மற்றும் கலாச் சாரப் பிரிவின் மாநிலத் தலைவர் காயத்ரி ரகுராம் தெரிவித்தார்.

ராமேசுவரத்தில் நேற்று நடை பெற்ற கட்சியின் கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு பிரதிநிதிகள் சந்திப்புக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட காயத்ரி ரகுராம் பின்னர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:

டி-சர்ட் போட்டுக்கொண்டு இந்தி எதிர்ப்புத் தெரிவிப்பது எல்லாம் ஒரு வியாபாரத் தந் திரம். பொய் சொல்லி வாக்குச் சேகரிப்பது போன்றுதான் இந்த டி-சர்ட் விஷயமும். தமிழ் மக்கள் இனிமேல் பொய்க்கு ஏமாற மாட் டார்கள். தமிழகத்தின் அடுத்த முதல்வர் ஸ்டாலின்தான் என்கிற அவரது பகல் கனவு பலிக்காது. ஏனென்றால் தமிழகத்தில் அடுத்து பாஜக தான் ஆட்சியைப் பிடிக்கும், என்றார்.

முன்னதாக மேடையில் நிர்வாகிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் அமர்ந்த நிலையில் மேடைக்குக் கீழே பரத நாட்டியத்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. கலை மற்றும் கலாச்சாரப் பிரிவு நிகழ்ச்சியிலேயே பரத நாட்டியத்தை மேடை ஏற்ற வில்லை என கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. இதனால், பரத நாட்டி யம் பாதியில் நிறுத்தப்பட்டு சிறப்பு விருந்தினர்கள் மற்றும் நிர்வாகிகள் மேடையிலிருந்து கீழே அமர்ந்தனர். மீண்டும் பரதநாட்டிய நிகழ்ச்சி மேடையில் நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x