Published : 11 Sep 2020 07:52 AM
Last Updated : 11 Sep 2020 07:52 AM
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தில் நீரின் தன்மை குறித்து மத்திய நீர்வள துறையினர் நேற்று ஆய்வுமேற்கொண்டனர். ஆய்வைத்தொடர்ந்து இவர்கள் நீதிமன்றத்தில் ஓர் அறிக்கையும் தாக்கல் செய்ய உள்ளனர்.
காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அத்திவரதர் வைபவம் கடந்த ஆண்டு நடைபெற்றது. ஜூலை 1-ம் தேதி தொடங்கிய இந்தவைபவம் தொடர்ந்து 48 நாட்கள்நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
ஆகஸ்ட் 18-ல் வைபவம் முடிந்தபின் மீண்டும் அனந்தசரஸ் குளத்தில் அத்திவரதர் சயனித்தார்.இதைத் தொடர்ந்து அந்த குளத்துக்குச் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர்குளத்தின் தன்மையை பாதுகாக்கவும், அசுத்தம் செய்யாமல் இருக்கவும் குளத்துக்குள் பொதுமக்களைஅனுமதிக்கக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 3 மாதங்களுக்கு ஒருமுறை அனந்தசரஸ் குளத்து நீரின் தன்மையை அறிந்து மாவட்ட நீதிபதியிடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய நீர்வள ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவைத் தொடர்ந்து மத்திய நீர்வளத் துறையின் உதவி நீர்வள ஆராய்ச்சி அதிகாரி ராஜன் தலைமையில் 5 பேர் கொண்ட குழு, அத்திவரதர் வைக்கப்பட்டுள்ள அனந்தசரஸ் குளத்தில் நீரின் தன்மையை ஆய்வு செய்தனர். இந்தக்குழுவினர் விரைவில் நீரின் தன்மைகுறித்த அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT