Published : 22 Sep 2015 09:15 AM
Last Updated : 22 Sep 2015 09:15 AM
மத்திய அரசின் ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் ரூ.700 உதவித்தொகை வழங்கப்படுகிறது.
செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனையில் பிரசவித்த தாய் மார்களுக்கு மேற்கூறிய திட்டத்தின் கீழ் காசோலை வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு வழங்கப்பட்ட காசோலையை வங்கியில் செலுத்தும்போது, வங்கிக் கணக்கில் பணம் இல்லை என திரும்பி வருவதாக பயனாளிகள் புகார் தெரிவித் துள்ளனர்.
இதுகுறித்து, பயனாளி ஞானமூர்த்தி கூறியதாவது: கடந்த ஜூலை 13-ம் தேதி பிரசவத்துக்காக எனது மனைவியை, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தேன். அங்கு அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. சிகிச்சை முடிந்து 2 நாட்களுக்கு பிறகு மருத்துவமனை யிலிருந்து வெளியேறினோம். அப்போது, பிரசவித்த தாய்க்கு உதவித்தொகை எனக்கூறி ரூ.700-க்கான வங்கி காசோலை வழங்கப்பட்டது. இந்த காசோலையை, அரசுடமையாக்கப்பட்ட வங்கியில் எனது மனைவியின் கணக்கில் கடந்த ஜூலை மாதம் 15-ம் தேதி செலுத்தினேன். ஆனால், காசோலைக்கான வங்கிக் கணக்கில் பணம் இல்லை என 20-ம் தேதி காசோலை திரும் பியது.
இதுதொடர்பாக, மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்தேன். ஓரிரு நாட்களில் வங்கிக் கணக்கில் பணம் வந்துவிடும். அதன் பின் காசோலையை வங்கியில் செலுத்தலாம் என்றனர். ஆனால், இதுவரை எங்களுக்கு பணம் கிடைக்க வில்லை என்றார்.
இதுகுறித்து, சுகாதாரத்துறை துணை இயக்குநர் ராஜசேகர் கூறியதாவது: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரசவித்த தாய்மார்களுக்கு, உதவித் தொகை வழங்குவதற்கான திட்ட நிதி கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டது. அதனால், வேறொரு திட்டத்துக்கு வழங்கப்பட்ட நிதியை பயன்படுத்திக் கொள்ள மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவிக்கப்பட்டது. அதனால் தாமதம் ஏற்பட்டிருக்கலாம் என்றார்.
இதுகுறித்து, செங்கல்பட்டு அரசு மருத்துவமனை முதல்வர் சுப்புராஜ் கூறிய தாவது: இந்த பிரச்சினை குறித்த புகார் ஏதும் எனது கவனத்துக்கு வரவில்லை. எனி னும், தற்போது விசாரித்ததில் நிதி வந்து சேருவதில் நிர்வாகரீதியாக ஏற்பட்ட சிக்கலில் காசோலை திரும்பியது தெரியவந் துள்ளது. பாதிக்கப்பட்ட பயனாளிகள் காசோலையுடன் நேரில் வந்தால் வேறு காசோலை வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT