Published : 07 Sep 2020 07:22 PM
Last Updated : 07 Sep 2020 07:22 PM
5 மாதத்திற்குப் பின் மதுரை- சென்னைக்கு கிளம்பிய முதல் சிறப்பு ரயிலில் 520 பேர் பயணம் செய்தனர்.
தமிழகத்தில் கரோனா தடுப்புக்கான பொது ஊரடங்கால் பேருந்து, ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டன.
இடையில் சென்னையில் கரோனா தாக்கம் அதிகரித்ததால் சென்னையை தவிர்த்து, 2 மாததிற்கு முன்பு சில தளர்வுடன் தென்மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு வரை ஓரிரு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.
இருப்பினும், சென்னை போன்ற பகுதியில் தொற்று பாதித்தோர் பிற மாவட்டத்திற்கு செல்வதைத் தடுக்க, மீண்டும் அந்த ரயில்கள் நிறுத்தப்பட்டன.
இந்நிலையில் கூடுதல் தளர்வு அறிவிக்கப்பட்டதால் மதுரை ரயில்வே கோட்டத்தில் இருந்து, இன்று முதல் 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இதன்படி, சென்னை எழும்பூர்- மதுரை, சென்னை- எழும்பூர்- தூத்துக்குடி, சென்னை எழும்பூர்- காரைக்குடி ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே (வைகை, பாண்டியன், முத்து நகர், பல்லவன்) ஆகிய நான்கும் சிறப்பு ரயில்களாக ஓடின. முதல் ரயிலாக மதுரையில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் இன்று காலை 7 மணிக்கு புறப்பட்டது.
ஏறத்தாழ 5 மாதத்திற்கு பிறகு மதுரை- சென்னைக்கு புறப்பட்ட இந்த ரயிலை அனுப்பி வைக் கும் நிகழ்ச்சியில் மதுரை கோட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
520-க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர். இதே போன்று திருச்சி கோட்டத்தில் இருந்து திருச்சி- நாகர்கோயிலுக்கு சென்ற இன்டர்சிட்டி சிறப்பு ரயில் மதுரைக்கு 8 மணிக்கு வந்தது.
அந்த ரயிலில் 100க்கும் மேற்பட்டோர் மதுரையில் இருந்து ஏறினர். இவர்களுக்கு ரயில் நிலைய நுழைவு வாயிலில் தெர்மல் ஸ்கே னர் கருவி மூலம் காய்ச்சல் ஆய்வு உள்ளிட்ட சோதனை, சானிடைசரால் கைகள் சுத்தம் செய்தபின் அனுமதிக்கப்பட்டனர்.
காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால் அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பு ஏதுவாக ஆம்புலன்ஸ் போன்ற முன்னேற்பாடும் ரயில் நிலைய வளாகத்தில் செய்திருந்தனர்.
மறு மார்க்கமாக இன்று இரவு பாண்டியன், முத்துநகர்(தூத்துக்குடி) ஆகிய ரயில்களும் சிறப்பு ரயில்களாக சென்னைக்குச் செல்கிறன.
மதுரை கோட்ட ரயில் நிலையங்களில் இந்த நான்கு ரயில்களுக்கான முன்பதிவு கவுன்டர்கள் கடந்த 5-ம் தேதி துவங்கிய நிலை யில், நேற்று வரை முன்பதிவு டிக்கெட்டுக்கான கட்டணமாக ரூ.11 லட்சத்திற்கும் மேல் வருவாய் கிடைத்துள்ளது.
மேலும், மதுரை கோட்டத்தில் ஏற்கனவே ஓடிய பயணிகளுக்கான ரயில்களை இயக்கம் குறித்து 16ம் தேதிக்கு மேல் தெரியவரும் என, கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் பிற கோட்டத்தில் இருந்து கன்னியாகுமரி- சென்னை, திருச்சி- நாகர் கோயில்(இன்டர்சிட்டி) ரயில்களும் மதுரை வழியாக சிறப்பு ரயிலாக ஓடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT