Published : 07 Sep 2020 11:25 AM
Last Updated : 07 Sep 2020 11:25 AM
திண்டுக்கல் மாவட்ட தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் மூக்கையாத்தேவர் குருபூஜையை முன்னிட்டு வத்தலகுண்டு காளி யம்மன் கோயில் முன் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதேபோல, மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை ஆதரித்து துண்டுப் பிரசுரம் வழங்கும் புதிய தமிழகம் கட்சி சார்பில் இரு சக்கர வாகனப் பேரணி வத்தலகுண்டு ஒன்றிய அலுவலகம் முன் தொடங்கியது. இதை அக்கட்சியின் தெற்கு மாவட்டச் செயலாளர் சரவணன் தொடங்கிவைத்தார். இரு சக்கர வாகனப் பேரணி காளியம்மன் கோயில் அருகே வந்தபோது ஒரு தரப் பினர் அதிக ஒலியுடன் ஹாரன் அடித்தனர். பதிலுக்கு மற்றொரு தரப்பினர் அவர்கள் வந்த வாகனத்தின் ஹாரனில் அதிக ஒலி எழுப்பினர்.
மேலும் இரு சக்கர வாகனப் பேரணியில் வந்தோர் அதிவேகமாக வாகனங்களை இயக்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். குறைவான எண்ணிக்கையிலான போலீஸாரே பாதுகாப்புக்கு இருந்ததால் இரு தரப்பினரின் செயலையும் தடுக்க முடியவில்லை. இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.
இந்நிலையில் காரில் வந்தவர்கள் இரு சக்கர வாகனப் பேரணியில் வந்தோரின் செயலைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட் டனர். இதனால், அரை மணிநேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது. போலீஸார் அவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்பினர். இரு அமைப்பினருக்கும் ஒரேநேரத்தில் நிகழ்ச்சிகள் நடத்த போலீஸார் அனுமதி அளித்ததே இந்தப் பதற்றத்துக்குக் காரணம் என பலரும் புகார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT