Published : 04 Sep 2020 08:13 PM
Last Updated : 04 Sep 2020 08:13 PM
தமிழக அரசு கரோனா நிவாரணம் வழங்கவேண்டும், நாடக நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்கவேண்டும் என வலியுறுத்தி திண்டுக்கல் நாடக நடிகர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
கடந்த ஐந்து மாதங்களாக கரோனா ஊரடங்கு காரணமாக நாடகநடிகள் தங்கள் வாழ்வாதாரத்தை இழுந்து வருவாய் இன்றி தவித்துவருகின்றனர்.
இந்நிலையில் திண்டுக்கல் நாடகநடிகர்கள் சங்கத்தினர் இன்று சாலைரோட்டில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். தங்களுக்கு அரசு கரோனா நிவாரண நிதி வழங்கவேண்டும்.
கோயில் விழாக்களில் நாடகம் நடத்த அனுமதியளிக்க வேண்டும். வயதான நாடக நடிகர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். கலை பண்பாட்டு மையத்தை திண்டுக்கல் மாவட்டத்தில் அமைக்க வேண்டும்,
என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாரதர், குறத்தி, பபூன், ஆகிய வேடமிட்டு நேற்று திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து வந்த போலீஸார் உரிய அலுவலர்களிடம் எடுத்துக்கூறி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து கலைந்து சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT