Published : 04 Sep 2020 06:52 PM
Last Updated : 04 Sep 2020 06:52 PM

தமிழகத்தில் இன்று புதிதாக 5,976 பேருக்குக் கரோனா தொற்று; சென்னையில் 992 பேர் பாதிப்பு: 6,334 பேர் டிஸ்சார்ஜ்

தமிழகத்தில் கரோனா பாதிப்பின் இன்றைய நிலவரம்.

சென்னை

தமிழகத்தில் இன்று புதிதாக 5,976 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 51 ஆயிரத்து 827 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று 992 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 39 ஆயிரத்து 720 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று (செப். 4) கரோனா தொற்று நிலவரம் தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள விவரங்கள்:

"தமிழகத்தில் இன்று புதிதாக 5,976 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களுள் ஆண்கள் 3,604 பேர். பெண்கள் 2,372 பேர்.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்து 51 ஆயிரத்து 827 ஆக உயர்ந்துள்ளது. இவர்களுள் ஆண்கள் 2 லட்சத்து 72 ஆயிரத்து 739 பேர். பெண்கள் 1 லட்சத்து 79 ஆயிரத்து 59 பேர். மாற்றுப் பாலினத்தவர்கள் 29 பேர்.

இதுவரை பாதிக்கப்பட்டவர்களுள் 0-12 வயதுடையவர்கள் 20 ஆயிரத்து 506 பேர். 13-60 வயதுடையவர்கள் 3 லட்சத்து 72 ஆயிரத்து 348 பேர். 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 58 ஆயிரத்து 973 பேர்.

இன்று கரோனா பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 83 ஆயிரத்து 699 பேர். மொத்தமாக கரோனா பரிசோதனை செய்யப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 51 லட்சத்து 30 ஆயிரத்து 741.

இன்று கரோனா பரிசோதனை செய்யப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை 81 ஆயிரத்து 588. மொத்தமாக கரோனா பரிசோதனை செய்யப்பட்ட தனிநபர்களின் எண்ணிக்கை 49 லட்சத்து 62 ஆயிரத்து 357.

இன்று மட்டும் தனியார் மருத்துவமனைகளில் 28 பேர், அரசு மருத்துவமனைகளில் 51 பேர் என 79 பேர் கரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 7,687 ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களுள் ஏற்கெனவே இணை நோய்கள் அல்லாதவர்கள் 8 பேர். இணை நோய்கள் உள்ளவர்கள் 71 பேர்.

தமிழகத்தில் இன்று 6,334 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 92 ஆயிரத்து 507.

தற்போது வரை 51 ஆயிரத்து 633 பேர் (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர்.

சென்னை நிலவரம்

தமிழகத்தில் இன்று கரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் சென்னையில் அதிகபட்சமாக 992 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 39 ஆயிரத்து 720 ஆக உயர்ந்துள்ளது.

இன்று 1,040 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால், குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 24 ஆயிரத்து 891 ஆக உயர்ந்துள்ளது. இன்று 12 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், உயிரிழப்பு எண்ணிக்கை 2,826 ஆக உயர்ந்துள்ளது. தற்போதுவரை சென்னையில் 12 ஆயிரத்து 3 பேர் (வீட்டில் சிகிச்சை பெறுவோ ர் உட்பட) சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் அரசு சார்பாக 64 மற்றும் தனியார் சார்பாக 91 என, 155 கரோனா பரிசோதனை மையங்கள் உள்ளன".

இவ்வாறு தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x