Published : 29 Sep 2015 08:41 AM
Last Updated : 29 Sep 2015 08:41 AM

காவிரி நதிநீர் பங்கீட்டில் ஒத்துழைப்போடு செயல்பட வேண்டும்: தமிழகம் - கர்நாடகத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

காவிரி நதிநீரைப் பங்கிட்டுக் கொள்வதில் தமிழகம் மற்றும் கர்நாடகம் விட்டுக் கொடுத்து ஒத்துழைப்போடு செயல்பட வேண்டுமென மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

மேட்டூர் அணையில் போதிய நீர் இல்லாததால் குறுவை சாகுபடி பொய்த்த நிலையில், காவிரி நீரை நம்பி தமிழகத்தில் காவிரி பாசன மாவட்டங்களில் சாகுபடிப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. ஆனால், போதிய தண்ணீர் இல்லாமல் பயிர்கள் கருகும் அபாயம் உள்ளது.

தற்போது மேட்டூர் அணையில் நீர் இருப்பு 68 அடியாக உள்ளது. இந்த பருவம் முழுவதற்கும் இது போதுமானதாக இருக்காது என்பதால், தமிழக விவசாயிகள் பெரும் கவலையடைந்துள்ளனர். ஆனால், தங்களது அணைகளில் போதிய தண்ணீர் இல்லை எனக் கூறி, தமிழகத்துக்கு தண்ணீர் தர முடியாது என கர்நாடக அரசு கடந்த சில நாட்களாக தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், காவிரி கண் காணிப்புக் குழு கூட்டம் டெல்லி யில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு மத்திய நீர்வள அமைச்சக செயலாளர் ஷஷி சேகர், மத்திய நீர் ஆணைய தலை வர் ஏ.பி. பாண்ட்யா, தமிழக தலைமைச் செயலாளர் கே.ஞான தேசிகன், கர்நாடக தலைமைச் செயலாளர் கவுசிக் முகர்ஜி மற்றும் கர்நாடக, புதுச்சேரி மாநில அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், தமிழக அரசு சார்பில், காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பின்படி அக்டோபர் முதல் ஜனவரி மாதம் வரையில் கர்நாடகம் விடுவிக்க வேண்டிய தண்ணீரில் 48 டிஎம்சி இன்னும் விடுவிக்கப்படவில்லை. இந்த தண்ணீரை உடனடியாக விடுவிக்க வேண்டுமென வலியுறுத்தப் பட்டது.

தமிழகத்தில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களின் பரப்பளவு விவரங்கள், பயிர்களின் தற்போதைய நிலை மற்றும் கர்நாடக அரசு இதுவரை விடுவித்துள்ள நீரின் அளவு குறித்தும் தமிழக அதிகாரிகள் புள்ளி விவரங்களுடன் எடுத்துரைத்தனர்.

மேலும், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தண் ணீரை விடுவிக்காமல், தங்களது அணைகள் நிரம்பினால் மட்டுமே தமிழகத்துக்கு தண்ணீரை விடு விக்கும் போக்கை கர்நாடக அரசு கையாண்டு வருவதால் தமிழகத் துக்கு உரிய தண்ணீர் கிடைப்ப தில்லை என்றும், உச்ச நீதிமன்றத் தில் கடந்த மே 10-ம் தேதி மத்திய அரசு அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்றும் தமிழக அரசு சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

மேலும், கர்நாடகத்தில் உள்ள அணைகளுக்கு வரும் தண்ணீ ரையும், வெளியேற்றப்படும் தண் ணீரையும் கண்காணிக்க உரிய ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண் டும் எனவும் கூட்டத்தில் தமிழகம் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

கர்நாடகம் கைவிரிப்பு

ஆனால், இந்த பருவத்தில் தங்களது மாநிலத்தில் 23 சதவீத அளவுக்கு மழை குறைந்து விட்ட தாகவும், அணைகளில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால், தண்ணீர் பற்றாக்குறை உள்ள தாகவும் தெரிவித்த கர்நாடக அரசு அதிகாரிகள், தமிழகத்துக்கு தற்போது தண்ணீர் தர இயலாது என்றும் தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

நீர் பற்றாக்குறை உள்ள காலங்களில் தமிழகம், கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களும் அதிக ஒத்துழைப்போடு, இருக்கும் தண் ணீரை எந்த அளவுக்கு சிறப்பாகப் பங்கிட்டுக்கொள்ள முடியுமோ அதன்படி செயல்பட வேண்டுமென இரு மாநிலங்களைச் சேர்ந்த அதி காரிகளிடமும் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் மத்திய அரசு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள் ளதாக கூட்டத்துக்குப் பின்னர் தெரிவிக்கப்பட்டது.

நடுவர்மன்றத் தீர்ப்பின் அடிப்படையில் தண்ணீரை விடுவிக்காமல், அணைகள் நிரம்பினால் மட்டுமே தமிழகத்துக்கு தண்ணீர் தரும் போக்கை கர்நாடக அரசு கையாண்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x