Last Updated : 27 Sep, 2015 09:29 AM

 

Published : 27 Sep 2015 09:29 AM
Last Updated : 27 Sep 2015 09:29 AM

திருக்கழுக்குன்றம் அரசு பள்ளி மாணவிகள் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் - விடுமுறை நாட்களில் கிராமம்தோறும் நடத்துகின்றனர்

திருக்கழுக்குன்றம் அரசு பள்ளி மாணவிகள் வார விடு முறை நாட்களில் கிராமப் பகுதிகளுக்கு சென்று பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப் புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிளாஸ்டிக் கேன்களில் செடிகளை வளர்க் கும் திட்டத்தை செயல்படுத்தி யுள்ளதோடு, பிளாஸ்டிக் கழிவு களை சேகரித்து மறு சுழற்சிக்கு அனுப்பும் முயற்சியிலும் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் அரசு பெண் கள் மேல்நிலைப் பள்ளியின் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவி கள், கிராமப் பகுதிகளுக்கு நேரில் சென்று பிளாஸ் டிக் பொருட்களை பயன்படுத்து வதால் ஏற்படும் தீமைகளை விளக்கி விழிப்புணர்வு பிரச் சாரத்தில் ஈடுபட்டு வருகின்ற னர். மேலும், பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பது, கழிவு களாக வீசப்பட்டுள்ள பிளாஸ் டிக் குப்பைகளை சேகரித்து மறு சுழற்சிக்கு அனுப்புவது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். குப்பைகளில் கிடைக்கும் பிளாஸ்டிக் கேன்களை பயன் படுத்தி, அழகு செடிகள் மற்றும் காய்கறி செடிகளை வளர்க்கும் திட்டத்தையும் செயல்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து, அப்பள்ளி மாணவிகள் கூறியதாவது: பிளாஸ்டிக் பொருட்களால் பணி கள் எளிதாக முடிவதாக கருதியே அதை அனைவரும் பயன்படுத்துகின்றனர். உண்மையில் அவற்றால் நமக்கு பெரிய தீமை ஏற் படும் என்ற உண்மை யாருக் கும் தெரிவதில்லை நிலத்தில் ஆண்டுக்கணக்கில் தேங்கி நிற்கும் மக்காத பிளாஸ்டிக்கு களால் மழைநீர் நிலத்தில் ஊடு ருவ முடிவதில்லை. இதனால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிறது.

நாம் ஏற்கெனவே கடும் குடிநீர் தட்டுப்பாட்டால் பாதிக் கப்பட்டுள்ளோம். அதனால், பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக் கும் வகையில் வார விடு முறை கிராமங்களுக்கு நேரில் சென்று பிளாஸ்டிக் கழிவு களை சேகரிக்கிறோம். பிளாஸ் டிக் ஒழிப்பு குறித்த விழிப் புணர்வு பிராச்சாரத்திலும் ஈடுபடுகிறோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, மாணவிகளை ஒருங்கிணைத்து வழி நடத்தி வரும் பள்ளியின் கணக்கு ஆசிரியை தேவிகாவிடம் கேட்ட போது, ‘வாரவிடுமுறை நாட்க ளில் கிராமங்களுக்கு, குழுவாக செல்லும் நாங்கள் கிராம மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த துண்டு பிரசுரங்களை வழங்குகிறோம். அப்பகுதியில் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்ய திட்டமிட்டோம். ஆனால், அதற்கான தொழில்நுட்ப வசதிகள் இங்கு இல்லை.

மறு சுழற்சி செய்ய முன்வரும் தன்னார்வ நிறுவனங்களிடம், சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை வழங்க தயா ராக உள்ளோம். குப்பையில் கிடைக்கும் பிளாஸ்டிக் கேன் களில், அழகு செடிகள் மற்றும் காய்கறி செடிகள் வளர்க்கும் திட்டத்தை செயல்படுத்தி, கிராம மக்களையும் இதை செய்யு மாறு அறிவுறுத்தி வருகி றோம். விழிப்புணர்வு பிரச்சாரத் தின்போது போக்குவரத்து தேவைக்கான நிதி வசதி யில்லை. அதனால், தொண்டு நிறுவனங்களின் நிதியுதவியை எதிர்பார்க்கிறோம். பள்ளியில் பிளாஸ்டிக் கேன்களில் செடி களை வளர்க்கும் திட்டத்தை செயல்படுத்த, நெல்வாய் பகுதியைச் சேர்ந்த மாலினி என்பவர் செடிகள் வழங்க முன்வந்துள்ளார் என்று அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x