Published : 04 Sep 2020 12:03 PM
Last Updated : 04 Sep 2020 12:03 PM

மாணவி தற்கொலை: விரக்தியில் இளைஞர் தற்கொலையா? - உடலை தகனம் செய்த இடத்தில் போலீஸார் ஆய்வு

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநா வலூர் அருகே மேட்டு நன்னாவரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆறு முகம் - சுமதி தம்பதி. இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் நித்ய (19), திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பயின்று வந்தார். மற்ற இரு சகோதரிகளும் பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.

ஊரடங்கால் வீட்டில் இருந்துவந்த நித்யஸ்ரீ சில தினங்க ளுக்கு முன் எலி மருந்தை சாப்பிட்டுதற்கொலைக்கு முயன்றார். சென்னை தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சைப் பலனின்றி இரு தினங்களுக்கு முன் உயிரி ழந்தார். அவரது உடல், மேட்டு நன்னாவரம் கிராம இடுகாட்டில் எரியூட்டப்பட்டது.

வீட்டில் ஒரே ஒரு செல்போன் இருந்த நிலையில், சகோதரிகள் 3 பேரும் ஆன்லைன் வகுப்புக்காக, அந்த செல்போன் தனக்கு வேண்டும் என்று சண்டையிட்டனர்; இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் இந்த தற்கொலை நடந்ததாக பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே உளுந்தூர்பேட் டையை அடுத்துள்ள ஆத்தூரைச் சேர்ந்த முருகன் மகன் ராமு (20) என்பவர், கடந்த ஆக.31 முதல் மாயமாகியுள்ளார். கல் லூரி மாணவி நித்யஸ்ரீ தகனம் செய்யப்பட்ட இடத்தில் அவரும், தற்கொலை செய்து கொண்டதாக திருநாவலூர் போலீஸாருக்குத் தகவல் வந்தது.

காவல் ஆய்வாளர் தேவி உள்ளிட்ட போலீஸார், இடுகாட் டிற்குச் சென்று தடயவியல் நிபுணர்களுடன் அவ்விடத்தில் ஆய்வு செய்தனர். அங்கு கை கடிகாரம், செல்போன் ஒன்று கண்டெடுக்கப் பட்டுள்ளது.

அது ராமுவுடையது என அவரது தந்தை முருகன் உறுதிப்படுத்தியுள்ளார். இதைய டுத்து, அங்கு கருகிய நிலையில் இருந்த சில எலும்புப் பகுதிகளை போலீஸார் டிஎன்ஏ ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளனர்.

ராமு நித்யஸ்ரீவிற்கு தூரத்துஉறவு முறை என்பது குறிப்பிடத் தக்கது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. போலீஸார், இடுகாட்டிற்குச் சென்று தடயவியல் நிபுணர்களுடன் அவ்விடத்தில் ஆய்வு செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x