Published : 03 Sep 2020 02:27 PM
Last Updated : 03 Sep 2020 02:27 PM
மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதியில் உள்ள கல்லுப்பட்டி பகுதியில் வாழை மரங்களில் பூச்சித் தாக்குதல் ஏற்பட்டதாக ஊடகங்களில் செய்தி வந்தன.
அதனைத் தொடர்ந்து அப்பகுதியை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு செய்தார் அவருடன் வேளாண்மை இணை இயக்குனர் விவேகானந்தன் தோட்டக்கலை துணை இயக்குனர் ரேவதி மற்றும் வேளாண்மை பேராசிரியர்கள் உடன் இருந்தனர்.
இதனை ஆய்வு செய்தபின் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:
வாழை மரங்களில் பூச்சியால் தாக்குதல் ஏற்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வந்தன அதனைத் தொடர்ந்து முதலமைச்சர் மற்றும் துணைமுதலமைச்சர் ஆணைக்கிணங்க பாதிக்கப்பட்ட பகுதிகளை வேளாண்மை பேராசிரியர்கள் ஆய்வு செய்தனர்.
அதில் பூச்சியால் வாழைமரம் தாக்குதல் ஏற்படவில்லை மேலும் நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறையால் ஏற்பட்டுள்ளது அதனால் தான் இதுபோன்ற குறைபாடு ஏற்பட்டுள்ளது.
இதனை சரியான முறையில் உரங்கள் யூரியா ஆகியவற்றை பயன்படுத்தினால் சத்துக் குறைபாடு நீங்கி முழு பயனும் கிடைக்கும் என்று வேளாண்மை பேராசிரியர்கள் கூறியுள்ளனர்
குறிப்பாக ஒரு மரத்திற்கு யூரியா 150 கிராம், டிஏபி 150 கிராம், பொட்டாஷ் 300 கிராம், சிங்க் சல்பேட் 40 கிராம், மெக்னீசியம் சல்பேட் 40 கிராம், நுண்ணூட்டச்சத்து கலவை 50 கிராம் இதுபோன்று நான்கு மாதம் உரங்கள்வைக்க வேண்டும் மேலும் ஐந்தாவது மாதத்தில் மண்புழு உரம் வைக்க வேண்டுமென்று இதனை ஆய்வு செய்த பேராசிரியர்கள் கூறியுள்ளனர்.
ஆகவே விவசாயிகள் அனைவரும் இதனை பயன்படுத்தினால் முழுப்பயனும் பெறலாம் அதுமட்டுமல்லாது தொடர்ந்து விவசாயிகள் வேளாண்மை துறை அலுவலகத்தில் தொடர்பு கொண்டு தேவையான ஆலோசனை பெற்று அதற்குரிய உரங்களை இடவேண்டும்.
அதுமட்டுமல்லாது பேரிடர் கால பருவ காலத்திற்கு ஏற்ப விவசாயிகள் எப்படி கையாள வேண்டும் என்று விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது தற்போது இப்பகுதி உள்ளவர்களுக்கும் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள உள்ளது என்று அவர் கூறினார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT