Published : 03 Sep 2020 10:57 AM
Last Updated : 03 Sep 2020 10:57 AM
பூஜைப் பொருட்களைக் கொண்டு வரக்கூடாது என்ற அரசின் கட்டுப்பாட்டால், கோயில்களைத் திறந்தும் பூ வியாபாரம் மந்தமாக இருப்பதாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனர்.
கரோனா ஊரடங்கில் மேலும் தளர்வுகளை அறிவித்து கோயில் களைத் திறந்து பக்தர்களை அனுமதிக்க அரசு உத்தரவிட்டது.
சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு கோயில் நிர்வாகங்கள் பல்வேறு கட்டுப் பாடுகளை விதித்துள்ளன. மதுரை மீனாட்சியம்மன் கோயில் நிர்வாகம், சமூக இடைவெளியைப் பின்பற்ற அறிவுறுத்தியதோடு மட்டுமல்லாது பக்தர்கள் தேங்காய், பழம், மாலை போன்ற பூஜைப் பொருட்களை கொண்டு வரவும் தடை விதித்துள்ளது.
கரோனா ஊரடங்கால் கடந்த 5 மாதமாக பூ விற்கும் வியாபா ரிகள் முடங்கினர். மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் கடந்த வாரம் முதல் செயல்படத் தொடங்கினாலும் முன்பு போல் வியாபாரம் இல்லை.
விவசாயிகளும் பூக்களுக்கு உரிய விலை கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் கோயில்கள் திறக்கப்பட்டாலும் பூஜைப் பொருட்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் பூ வியாபாரம் மந்தமாகவே உள்ளது.
மாட்டுத்தாவணி பூ மார்க் கெட் வியாபாரி ராமச்சந்திரன் கூறியதாவது:
கோயில்களில் சுவாமி தரிசனம் செய்ய மட்டும் பக்தர்கள் அனு மதிக்கப்படுகின்றனர்.
இதனால் பூஜைப் பொருட்கள் விற்பனை இல்லை. கோயில்களை திறந்தது மகிழ்ச்சிதான். இன்னும் கொஞ்ச காலத்தில் விடிவு பிறக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.
மார்க்கெட்டில் நேற்று மல்லிகை கிலோ ரூ.500, அரளி, செவ்வந்தி, சம் பங்கி, பன்னீர்ரோஜா ரூ.100, பட்டன் ரோஜா ரூ.150-க்கும் விற் பனையானது, என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT