Published : 02 Sep 2020 04:48 PM
Last Updated : 02 Sep 2020 04:48 PM

திருமோகூர், திருவாதவூர் புண்ணிய தலங்களுக்குச் செல்ல இணைப்புச் சாலை அமைவது எப்போது?- ஒத்தக்கடையில் நெரிசல்

மதுரை

சென்னையிலிருந்து திருச்சி வழியாக மதுரை வரும் என்எச் 45 பி நான்குவழிச்சாலையில் ஒத்தடைக்கடை ராஜகம்பீரம் மேம்பாலம் அமைந்துள்ள பகுதியிலிருந்து பழமையான புண்ணிய தலங்களான திருமோகூர், திருவாதவூர் பகுதிகளுக்கு இணைப்பு சாலை வசதியில்லாததால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள், ஒத்தக்கடையை சுற்றி வர வேண்டிய உள்ளது.

அதனால், ஒத்தக்கடை பகுதியில் மாநகர்பகுதி போல் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வருகிறது.

சென்னையிலிருந்து திருச்சி, திண்டுக்கல் வழியாக மதுரைக்கு நான்குவழி தேசிய நெடுஞ்சாலை (என்எச்45 பி) உள்ளது.

இந்த சாலை சென்னையிலிருந்து திருச்சி வரை என்எச்45 என்றும் அதிலிருந்து மதுரை வழியாக தூத்துக்குடிக்கு இந்த சாலை பிரிவதால் மதுரையில் இந்த சாலை என்எச் 45 பி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த என்எச் 45 பி நான்கு வழிச்சாலை சென்னைலிருந்து மதுரையில் நுழையும்பகுதியில் ஒத்தக்கடை உள்ளது.

ஒத்தக்கடை வேளாண்மை கல்லூரியில் இருந்து மாட்டுத்தாவணி வருவதற்கு இணைப்பு சாலை உள்ளது. ஆனால், இதே சாலை ஒத்தக்கடை ராஜகம்பீரம் பத்திரப்பதிவு அலுவலகத்தை கடக்கும்போது அப்பகுதியில் ஒரு மேம்பாலம் செல்கிறது. இந்த மேம்பாலத்திற்கு கீழே குறுக்காக மேலூர்-திருவாதவூர்-ஒத்தக்கடை சாலை கடக்கிறது.

இந்த சாலைக்கும், திருச்சி-மதுரை நான்குவழிச்சாலைக்கும் துளியும் சம்பந்தமில்லாமல் இணைப்பு சாலை எதுவும் இல்லாமல் செல்கின்றன. பொதுவாக தேசிய நான்குவழிச்சாலைகள் உயர்மட்ட மேம்பாலங்கள், தரைப்பாலங்களை கடக்கும்போதும், முக்கிய மாநில நெடுஞ்சாலைகளை கடக்கும்போதும் அருகில் உள்ள நகரங்களுக்கு வாகன ஓட்டிகள் திரும்பி செல்வதற்கு எளிதாக சாலையின் இரு புறமும் குறுக்கு சாலைகளோ அல்லது இணைப்பு சாலைகளோ போடப்படுவது உண்டு.

அதுதான் தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையத்தின் நான்குவழிச்சாலை போக்குவரத்து விதிமுறை. ஆனால், திருவாதவூர்-ஒத்தக்கடை சாலை, என்எச் 45 பி நான்குவழிச்சாலை கடக்கும் மதுரை ராஜகம்பீரம் பகுதியில் மட்டும் பின்பற்றப்படவில்லை.

அதனால், சென்னை, திருச்சியிலிருந்து வருவோர், அதுபோல் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் இருந்து வருவோர் மதுரையில் பழமையான புண்ணிய தலங்கள் உள்ள திருமோகூர், திருவாதவூர் கோயில்களுக்கும், ராஜம்பீரம் ஒருங்கிணைந்த மதுரை மாவட்ட பத்திரப்பதிவு அலுவலகத்திற்கு செல்வதற்கும் ராஜகம்பீரம் பகுதியில்

உடனடியாக இந்த சாலையில் இறங்குவதற்கும், ஏறுவதற்கும் வழியில்லாமல் தேவையில்லாமல் வேளாண்மை கல்லூரி அருகே சென்று அங்கிருந்து ஒத்தக்கடை ஊரை சுற்றி வர வேண்டிய உள்ளது.

அதுபோல், கிருஷ்ணகிரி, சேலம், திண்டுக்கல் போன்ற தமிழகத்தன் மேற்கு மாவட்டங்களில் இருந்து வருவோரும் திருமோகூர், திருவாதவூர் செல்வதற்கு, மாட்டுத்தாவணியை சுற்றி, அங்கிருந்து ஒத்தக்கடைக்கு வர வேண்டிய உள்ளது. அதனால், ஒத்தக்கடைப்பகுதி கடந்த 5 ஆண்டாக கடும் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்து வருகிறது.

திருச்சி-மதுரை என்எச்-45 பி நான்கு வழிச்சாலையில் இரு புறமும் வேளாண்மை கல்லூரியிலிருந்து ராஜகம்பீரம் வரை, இணைப்பு சாலை அல்லது குறுக்கு சாலை போடுவதற்கு தேவையான நிலம் ஏற்கணவே உள்ளது.

ஆனால், முறையான இணைப்பு சாலை அல்லது குறுக்குவழிச்சாலை இல்லாததால் போடப்படாமல் உள்ளதால் ஆங்காங்கே மக்கள், வாகன ஓட்டிகள் கிராமங்கள் வழியாக போடப்பட்டுள்ள மண் சாலைகள் வழியாகவும், பட்டா நிலங்கள் வழியாகவும் நான்குவழிச்சாலைக்கு குறுக்காக வருகின்றனர்.

இப்படி வருவோர், நான்குவழிச்சாலையில் அதிவேகத்தில் வரும் கனரக வாகனங்கள், பயணிகள் வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளாக நேரிடுகிறது. கடந்த 5 ஆண்டுகளில் இந்த பகுதியில் இதுபோல் நூற்றுக்கும் மேற்பட்ட விபத்துகள் நடந்துள்ளன.

ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். அதனால், திருச்சி-மதுரை என்எச்45 பி நான்கு வழிச்சாலையிலிருந்து திருமோகூர், திருவாதவூருக்கு ராஜகம்பீரம் மேம்பாலத்திற்கு முன்பு இருந்து இணைப்பு சாலை அல்லது குறுக்கு சாலை முக்கிய தேவையாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x