விஜயகாந்த் நலம் பெற ராமேசுவரத்தில் திலக ஹோமம்: குடும்பத்தினருடன் பங்கேற்பு; பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு

விஜயகாந்த் நலம் பெற ராமேசுவரத்தில் திலக ஹோமம்: குடும்பத்தினருடன் பங்கேற்பு; பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு

Published on

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலம் பெற ராமேசுவரத்தில் குடும்பத்தோடு பரிகார பூஜை நடத்தப்பட்டது.

தேமுதிக தலைவர் விஜயகாந்த், கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நிலை சரியில்லாமல் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். சிங்கப்பூர் , அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலும் அவர் சிகிச்சை மேற்கொண்டார்.

அதேநேரத்தில் அரசியல் நடவடிக்கைகளையும் தொடர்ந்து கவனித்து சமூக ஊடகங்களின் வாயிலாக முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா, மகன் விஜயபிரபாகரன், மைத்துனர் சுதீஷ் ஆகியோருடன் செவ்வாய்கிழமை காலை ராமேசுவரம் வந்தார்.

ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே உள்ள புரோகிதர் ஒருவரின் வீட்டில் ராகு கேது பெயர்ச்சியையொட்டி 19 புரோகிதர்கள் சேர்ந்து திலக ஹோமம் வழிபாட்டினை விஜயகாந்த் உடல் நலம் பெற அவரது குடும்பத்தினர் நடத்தி உள்ளனர்.

கரோனா பரவல் காரணமாக கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் சந்திப்பு திட்டம் இல்லை என முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் பத்திரிக்கையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in