Published : 29 May 2014 10:36 AM
Last Updated : 29 May 2014 10:36 AM
காஞ்சிபுரத்தை இந்தியர்களுக்கு அறிமுகப்படுத்திய பட்டு நெச வுத் தொழில், இன்று பட்டுப்போய் விடுமோ என்ற அச்சத்தின் பிடியில் இருக்கின்றனர் நெசவாளிகள். காஞ்சிபுரத்தில் நாளுக்கு நாள் பட்டு நெசவுத் தொழில் நலி வடைந்து வருகின்றது.
கைத்தறி துணி உற்பத்தியில் அனைத்து ரகங்களிலும் விசைத்தறி உள்ளிட்ட நவீன இயந்திரங்கள் ஆக்கிரமித்துவிட்டன. இருப்பி னும், நவீன இயந்திரங்கள் உற்பத்தி செய்ய முடியாத ரகங் களை, மனித தொழில் திற னால் மட்டுமே வழங்கிக் கொண் டிருக்கும் தனித்தன்மை வாய்ந்த பட்டு நெசவாளர்களாக காஞ்சி நெசவாளர்கள் இன்றும் திகழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
குறைந்து வரும் நெசவுத் தொழிலாளர்கள்
1995-ம் ஆண்டு வரை 70 ஆயிரம் நெசவாளர்களை தன்ன கத்தே கொண்டிருந்த காஞ்சிபுரம் பட்டு நெசவு, மத்திய அரசின் இறக்குமதி பட்டு நூலின் மீதான வரிவிதிப்பு, வெள்ளி மற்றும் தங்கத்தின் விலை உயர்வு, ஜரிகை யின் விலை உயர்வு, உறுதியற்ற வேலைவாய்ப்பு மற்றும் போனஸ், நியாயமான கூலி, சமூக பாதுகாப்பு நலத்திட்டங்கள் இவை எதுவும் கிடைக்காத நிலையை நெசவாளர்கள் சந்தித்து வருகின்றனர். இதனால் பட்டு நெசவில் ஈடுபட்டுவந்த 40 ஆயிரம் தொழிலாளர்கள் இன்று அத்தொழிலை விட்டு வெளி மாவட்டங்களுக்கு வேலை தேடிச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள் ளனர். இது குறித்து தமிழ்நாடு நெசவுத் தொழிலாளர் சம் மேளன பொதுச்செயலர் ஏ.முத்து குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:
“அரசின் எந்த முதலீடும் இல்லா மல் 70 ஆயிரம் நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கியதே பாரம்பரியமிக்க இத்தொழிலின் சிறப்பம்சம்.அப்படிப்பட்ட தொழி லாக இருந்தும், பட்டு நெசவாளர் களும், பட்டு நெசவும் நலிந்து போயிருப்பது, நமது ஆட்சி யாளர்கள் கடைபிடித்த ஜவுளிக் கொள்கையின் தோல்வியையே காட்டுகிறது.
ஆய்வு நடத்தவில்லை
மத்திய அரசின் எந்த ஒரு திட்ட மும், ஜவுளித் தொழிலில் முக்கிய அங்கமாக விளங்கும் கைத்தறி நெசவுத் தொழிலை பாதுகாக்கத் தவறிவிட்டது.
நெசவுத் தொழிலை பாதுகாப்பதற்காக ராஜீவ்காந்தி காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய ஜவுளிக் கொள்கை, சத்தியம் குழுவின் பரிந்துரை உள்ளிட்ட எந்த நடவடிக்கையும் கைத்தறி நெசவாளர்களின் வாழ்வையும், அவர்களின் நெசவுத் தொழிலையும் மீட்டெடுக்கவில்லை. இவை தொடர்பாக மத்திய, மாநில ஆட்சியாளர்கள் எந்த ஆய்வையும் நடத்தியதாக தெரியவில்லை.
ரூ.300 கோடி வர்த்தகம்
2009-10 நிதியாண்டு வரை காஞ்சி நகரத்தின் பட்டு சேலை வர்த் தகம் கூட்டுறவு சங்கங்கள் மற்றும் தனியார் சேர்த்து ரூ.250 கோடி வரை நடைபெற்றுள்ளது. காஞ்சி பட்டு வர்த்தகம் தற்போது ரூ.300 கோடியை தாண்டியிருக்கும்
வளர்ந்து வரும் வியாபாரத்தின் மூலம் கிடைக்கும் லாபத்தை வியா பாரிகளும், ஜவுளி உற்பத்தி யாளர்களும், இடைத்தரகர்களும் பகிர்ந்துகொண்டார்களே தவிர, பட்டு சேலை படைப் பாளிகளுக்கு துளியும் சென்று சேரவில்லை என்பது உலகம் அறியாத செய்தி.
எம்ஜிஆரின் சட்டம் அமல்படுத்தப்படவில்லை
நெசவாளர்களைப் பாதுகாப் பதற்காக, 1984-ம் ஆண்டு, அப்போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் கொண்டு வந்த நெச வாளர்களுக்கு பல சமூக நல பாது காப்புகளை வழங்கக் கூடிய நெச வாளர் நலச் சட்டம், ஏன் 29 ஆண்டு காலமாக கிணற்றில் போட்ட கல்லாக கிடப்பில் கிடக்கி றது என்ற கேள்விக்கு அரசிடம் பதில் இல்லை. தனியார் நெசவாளர் கள் நலனுக்காக கடந்த 1995-ம் ஆண்டு கொண்டுவரப் பட்ட நெசவாளர்களுக்கான பஞ்சப்படி சட்டத்தால், ஒரு தனியார் நெசவாள ரும் பயனடையவில்லை. மாறி வரும் மக்களின் ரசனைக்கு ஏற்ப பட்டுத் துணிகளின் உற்பத்தி வடி வங்களை, சந்தைக்கு புதிதாக அறிமுகப்படுத்துவதன் மூலம் பட்டு நெசவும் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள முடியும்.
இந்த சூழலில் அரசின் அர வணைப்பு இருந்தால் மட்டுமே ஆயிரக்கணக்கான பட்டு நெச வாளர் குடும்பங்கள் தழைக்கும். அதை எதிர்நோக்கிக்கொண்டு காத்துக்கிடக்கிறோம்” என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment