Published : 30 Aug 2020 11:57 AM
Last Updated : 30 Aug 2020 11:57 AM

கரோனா சிகிச்சைக்கு தமிழகத்தில் முதல் மாவட்டமாக வேலூரில் சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கு மத்திய அரசு அனுமதி: மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தகவல்

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா பாதிப்பில் இருந்து சித்த மருத்துவத்தின் மூலம் குணமடைவது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நேற்று மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. அருகில், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், சித்த மருத்துவ அலுவலர் சுசிகண்ணம்மா, சித்த மருத்துவர் தில்லைவாணன் உள்ளிட்டோர் | படம்: வி.எம்.மணிநாதன்.

வேலூர்

தமிழகத்தில் முதல் முறையாக வேலூர் மாவட்டத்தில் கரோனா மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள சித்த மருத்துவ முறை ஆராய்ச் சிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரி வித்துள்ளார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா பாதிப்பில் இருந்து சித்த மருத்து வத்தின் மூலம் குணமடைவது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் சுசி கண் ணம்மா மற்றும் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதில், கரோனா வைரஸ் பரவலில் சித்த மருத்துவத்தின் பங்கு குறித்தும் பல்வேறு உலக நாடுகளில் கரோனா வைரஸ் தடுப்பில் மூலிகைகளின் பங்கு குறித்த ஆராய்ச்சி முடிவுகள், உணவுகள் மூலம் கரோனா வைரஸ் பரவலை தடுப்பது மற்றும் பின்விளைவுகளை தடுப்பது குறித்தும் சித்த மருத்துவர் தில்லைவாணன் படக்காட்சிகள் மூலம் விளக்கினார்.

இதுபோன்ற விழிப்புணர்வு கூட்டத்தை மாநகராட்சி அளவிலும் வருவாய் கோட்டம் மற்றும் காவல் துறை அதிகாரிகள் மத்தியில் நடத்தவும் திட்டமிட்டுள்ளனர். கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் பேசும்போது, ‘‘வேலூர் தந்தை பெரியார் அரசினர் பொறியியல் கல்லூரி வளாகத்தில் சித்த மருத்துவ முறையில் கரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு சித்த மருத்துவ சிகிச்சை தொடர்பான ஆய்வு நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன்மூலம் சித்த மருத்துவ சிகிச்சை ஆய்வுக்கு அனுமதி பெற்ற முதல் மாவட்டமாக வேலூர் இடம் பெற்றுள்ளது’’ என்றார்.

இந்தக் கூட்டம் தொடர்பாக சித்த மருத்துவர் தில்லைவாணன் கூறும்போது, ‘‘கரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக சித்த மருந்துகளை பயன்படுத்துவதில் நல்ல முன்னேற்றம் இருந்தது. வேலூர் தந்தை பெரியார் அரசினர் பொறியியல் கல்லூரியில் செயல் படும் சித்த மருத்துவ சிகிச்சைப் பிரிவில் 2,500 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மஞ்சள் பயன்படுத்துவதால் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைவது சீன ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. எனவே, மஞ்சள் கலந்த பாலை நாம் அதிகம் எடுத்துக்கொள்ளலாம். அதிமதுரம் சூரணம் இருமலுக்கு நல்லது. ஆடாதோடா கசாயத்தில் அதிமதுரமும் சேர்ந்துள்ளதால் குடிக்கலாம். கரோனா சிகிச்சை வார்டில் இரவு நேரத்தில் ஆடா தோடா கசாயம் கொடுக்கிறோம்.

நாம் உண்ணும் உணவுதான் கரோனாவுக்கான மருந்தாக உள்ளது. விட்டமின் சி-க்கு கொய்யா சாப்பிடலாம். முளை கட்டிய தானியங்களில் இருந்து அதிகப்படியான ஜிங்க், புரோட்டீன் சத்துக்கள் கிடைக்கும். விட்டமின் டி-3 கிடைக்க எண்ணெய் தேய்த்து வெயிலில் நிற்கலாம்.

கொதிக்க வைத்த பூண்டு பால் குடிப்பதால் அலிசின் என்ற வேதிப்பொருள் உடலில் கரோனா வைரஸ் பல்கிப் பெருகுவதை தடுக்கிறது என முதல் நிலை ஆராய்ச்சி ஒன்றில் தெரியவந்துள்ளது. முருங்கைக் கீரை சூப் குடிப்பதால் அனைத்து வகையான விட்டமின்களும் நமக்கு கிடைக்கிறது.

நுரையீரல், மூச்சுக்குழாய் பிரச்சினைகளை தீர்ப்பதில் தூதுவளை சூப் சிறப்பாக கைகொடுக்கிறது. துளசி கசாயம் கொடுக்கலாம். குழந்தைகளுக்கு கற்பூரவள்ளி தழை அல்லது சாறாக 5-10 மி.லி கொடுக் கலாம்.

வேலூரில் சித்த மருத்துவ முறையில் கரோனா வார்டில் எங்களுக்கு கிடைத்த பின்னூட்ட தகவலின் அடிப்படையிலும் பல்வேறு உலக நாடுகளில் மூலிகைகளை பயன்படுத்துவது தொடர் பான ஆராய்ச்சி தகவல்களையும் சேகரித்து சித்த மருத்துவத்தின் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்’’ என தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x