Last Updated : 29 Aug, 2020 07:51 AM

2  

Published : 29 Aug 2020 07:51 AM
Last Updated : 29 Aug 2020 07:51 AM

மக்களுக்கு நம்பிக்கை தரும் வகையில் மாற்றியமைக்கப்படுமா கரோனா சிகிச்சை முறை?

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அறிகுறி உள்ளவர்களுக்கு அரசால் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்துவதாக புகார்கள் உள்ளன.

பொதுவாக, தொற்று பாதிப்பு உள்ளதா என்பதை, பாதிக்கப்பட்டவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். ஆனால், உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையை, சம்பந்தப்பட்டவர்களின் பார்வைக்கு கொண்டுசெல்வதில்லை என்ற புகாரும் உள்ளது.

அண்மையில், சென்னை நெசப்பாக்கம் பகுதியில், ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருப்பதாகக் கூறி, கோவிட்-19 கேர் சென்டராக மாற்றப்பட்டுள்ள புளியந் தோப்பு வீட்டு வசதி வாரிய அடுக்குமாடிக் குடியிருப்புக்கு அழைத்துச் சென்று, வீதி யில் அமர வைத்துள்ளனர். நீண்ட நேரத்துக் குப் பிறகு 8-வது தளத்தில் உள்ள அறை யில் அவரை தங்கவைத்துள்ளனர். சர்க் கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள அவ ருக்கு, 5 நாட்கள் கடந்தும், ஒருமுறை மட்டுமே சர்க்கரை பாதிப்பு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், மிகுந்த மன இறுக்கத்துடனும், அச்சத்துட னும் இருக்க வேண்டியிருக்கிறது என்று வேதனை தெரிவித்தார் அவர்.

பின்னர், அவரது மனைவிக்கு செய்யப்பட்ட பரிசோதனையில், கரோனா அறிகுறி இருப்பதாக வாய்மொழியாக தகவல் அளித்துள்ளனர். அந்த பெண் கூறும்போது, "உங்களுக்கு பாதிப்பு அறிகுறி தென்படுகிறது. நீங்கள் 2 மாற்று உடைகளை எடுத்துக்கொண்டு நெசப்பாக்கம் வந்துவிடுங்கள். சம்பந்தப்பட்ட மருத்துவமனை அல்லது தனிமைப்படுத்தும் முகாம் மையங்களுக்கு செல்வதற்கு முன்னதாக, நெசப்பாக்கம் மருத்துவமனையில் பரிசோதனை செய்ய வேண்டும் என்றுகூறி, வெகு நேரம் காத்திருக்கச் செய்தனர். ஆனால், எனது மருத்துவப் பரிசோதனை அறிக்கையை தர மறுத்தனர். வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளவும் அனுமதிக்கவில்லை.

நீண்டநேரப் போராட்டத்துக்குப் பிறகு, எனது மருத்துவ அறிக்கையில் எந்தவி தப் பாதிப்பும் இல்லை, `ஹோம் ஐசோ லேஷன்' எனக் குறிப்பிட்டு, மருந்துப் பெட்டகத்தை என்னிடம் வழங்க மருத்து வர் முற்பட்டார். அப்போது அங்கு வந்த தன் னார்வலர்கள் சிலர், `அவரை குறிப்பிட்ட தனிமைப்படுத்தல் மையத்துக்கு அழைத் துச் செல்ல முடிவு செய்துள்ளோம்' என்று கூறி, மருந்துப் பெட்டகம் வழங்குவதை தடுத்து, வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றனர். எங்கள் குழந்தைகள் நிலையை அவர்கள் கண்டுகொள்ளவில்லை.

காவல் துறையினரை வரவழைத்து, ஆம்புலன்ஸில் ஏற்றி, டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் இறக்கிவிட்டனர். எங்கள் வாகனத்திலி ருந்து இறங்கியவர்களுக்கு 10 நாட்களுக் கான மாத்திரையை கொடுத்துவிட்டு, சென்றுவிட்டனர். அங்குள்ள ஊழியரிடம் கேட்டபோது, `படுக்கை எங்கு காலியாக இருக்கிறதோ அங்கு சென்றுவிடுங்கள்' என்று கூறினர். ஒரே அறையில் பலரும் நெருக்கமாக இருக்கும் சூழலே இருந்தது.

சுமார் 100 பேருக்கு ஒதுக்கப்பட்ட குளியலறை மற்றும் கழிப்பறையின் எண்ணிக்கை 5 மட்டும்தான். அதிலும் தாழில்லாத கதவுகள்.

தனிமை முகாமுக்கு அழைத்து வந்து 48 மணி நேரம் கடந்தும், உடல்நிலையைப் பரிசோதிக்க மருத்துவர் வரவில்லை. பல்வேறு கட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அனுமதி கிடைத்தது. வீட்டுக்கு வந்த பின்னரே அச்சம் நீங்கியது.

இனியேனும், பாதிப்பு உள்ளவர்களை மட்டும் அழைத்துச் சென்று, சரியான சிகிச்சை அளிப்பதுடன், மக்களிடம் நம்பக கத்தன்மையை ஏற்படுத்துவதே இதற்கெல் லாம் தீர்வாக இருக்கும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x