Published : 29 Aug 2020 07:46 AM
Last Updated : 29 Aug 2020 07:46 AM
நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்கள் பயனடையும் வகையில் ரூ.3,384 கோடியில் புதிய திட்டம் ஒன்று பரிசீலனையில் உள்ளதாக முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
கரோனா தடுப்பு நடவடிக்கை கள், திருவாரூர் மாவட்ட வளர்ச் சிப் பணிகள் குறித்து முதல்வர் பழனிசாமி, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். முன்ன தாக 781 பயனாளிகளுக்கு ரூ.5.89 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார். பின்னர், ரூ.22.66 கோடி யில் 23 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியதுடன், ரூ.11.50 கோடி மதிப்பிலான முடிவுற்ற 14 திட்டங்களையும் முதல்வர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து விவசாயிகள், மகளிர் சுய உதவிக் குழுவினர், சிறு-குறு தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆகியோருடன் முதல்வர் கலந்துரையாடினார்.
ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் ஆர்.காமராஜ், மாவட்ட ஆட்சியர் த.ஆனந்த் மற்றும் அனைத்துத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
பின்னர் முதல்வர் பழனிசாமி, செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காவிரி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த மாவட்டங்களில் 8 தொழில்கள் தொடங்கக் கூடாது என வரையறுக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஹைட்ரோகார்பன், மீத்தேன் கிணறு அமைக்க தடை, துத்தநாகம், இரும்பு, செம்பு, அலு மினியம், உருக்காலைகள், தோல் பதனிடும் தொழில் தொடங்க தடை விதிக்கப்படும்.
நாகப்பட்டினம், திருவாரூர், தஞ் சாவூர் மாவட்டங்கள் பயனடையும் வகையில் காவிரி உப வடிநில பகுதி யில் உள்ள பாசன அமைப்புகளை விரிவுபடுத்துதல், புனரமைப்பு செய் தல் மற்றும் நவீனப்படுத்துவதற்காக ரூ.3 ஆயிரத்து 384 கோடியில் புதிய திட்டம் ஒன்று பரிசீலனையில் உள்ளது. பொதுப்பணித் துறை மூலமாக பல்வேறு தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன, நீரொழுங்கிகள் புனரமைக்கப்பட்டுள்ளன என்று முதல்வர் தெரிவித்தார்.
தொடர்ந்து, தஞ்சாவூரில் நடை பெற்ற ஆய்வுக் கூட்டத்தில் முதல் வர் பழனிசாமி பங்கேற்றார். புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட் டிய முதல்வர், முடிவுற்ற பணி களைத் தொடங்கிவைத்து, ரூ.49.70 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அமைச் சர் இரா.துரைக்கண்ணு, மாநிலங் களவை உறுப்பினர் ஆர்.வைத்தி லிங்கம், மாவட்ட ஆட்சியர் ம.கோவிந்தராவ் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
விவசாயிகள் நன்றி
திருவாரூரில் இருந்து கார் மூலம் தஞ்சை சென்று கொண்டிருந்த முதல்வர், திருவாரூர் மாவட்டம் கோவில்வெண்ணி ஆதனூர் கிராமத்தில் 15 பெண்கள் வயலில் களை பறித்துக் கொண்டிருப்பதை கண்டார். காரை நிறுத்தி அப்பெண்களிடம் உரையாடினார். அவர்கள் முகக்கவசம் இல்லாமல் இருப்பதை கண்டு, வாகனத்தில் வைத்திருந்த முகக்கவசத்தை வழங்கினார். அப்போது அரசின் நிவாரண உதவிகள், 5 மாதங்களாக இலவச அரிசி, பருப்பு, எண்ணெய் போன்ற பொருட்கள் கிடைத்ததா என்று கேட்டறிந்தார்.
மேலும், நியாயமான கூலி, அனைத்து நாட்களிலும் விவசாய பணி கிடைக்கி றதா என்பதையும் கேட்டறிந்தார். அப்போது, நிவாரணம், இலவச உணவுப் பொருட்கள் வழங்கப்பட்ட தற்கு முதல்வருககு அப்பெண்கள் நன்றி தெரிவித்தனர்.
‘கூட்டணிக்கு அதிமுகவே தலைமை’
கூட்டணி தலைமை குறித்து பாஜக தெரிவித்துள்ளது பற்றி திருவாரூரில் முதல்வர் பழனிசாமியிடம் கேட்டபோது, “இன்னும் தேர்தலே வரவில்லை. தேர்தல் வரும்போது யார் தலைமை என்று தெரிவிக்கப்படும். கூட்டணியில் யார் யார் எந்தப் பக்கம் என்று இன்னமும் நிர்ணயிக்கப்படவில்லை. அதிமுகவிலும் அப்படித்தான், திமுக உள்ளிட்ட மற்ற கட்சிகளிடமும் அப்படித்தான் உள்ளது. தேர்தல் வரும்போதுதான் அதை முடிவு செய்வார்கள்” என்று முதல்வர் தெரிவித்தார். தொடர்ந்து, தஞ்சாவூரில் பேசும்போது, “தமிழகத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா இருந்தபோது அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்தித்தோம். அவர்கள் இல்லாமல் கடந்த எம்.பி தேர்தலை அதிமுக தலைமையில்தான் சந்தித்தோம். எந்த தேர்தலிலும் அதிமுக தலைமையில்தான் கூட்டணி” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment