Published : 28 Aug 2020 07:38 AM
Last Updated : 28 Aug 2020 07:38 AM

100 நாள் வேலை கேட்டு விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருப்பு போராட்டம்

தின்னலூரில் 100 நாள் வேலை வழங்க வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர்.

மதுராந்தகம்

அச்சிறுப்பாக்கம் அருகே தின்னலூர் ஊராட்சியில் 100 நாள் வேலை கேட்டு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

அச்சிறுப்பாக்கம் அருகே உள்ளது தின்னலூர் ஊராட்சி. இங்கு 400-க்கும் மேற்பட்டவர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் பணி செய்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாக 55 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வேலை தர ஊராட்சி நிர்வாகம் மறுத்து வருகிறது.

ஊரடங்கு காலத்தில் அனைத்துதரப்பு மக்களும் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில் பலர் 100 நாள் வேலையை நம்பியுள்ளனர். திடீரென வேலைமறுக்கப்படுவதால் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தின்னலூர் ஊராட்சியில் அனைத்து தரப்புமக்களுக்கும் வேலை வழங்கவலியுறுத்தியும், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் ரூ.7,500 நிவாரணம் வழங்க கேட்டும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தின்னலூர் ஊராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்துக்கு மதுராந்தகம் வட்டச் செயலர் எஸ்.ராஜாதலைமை தாங்கினார். போராட்டத்தில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.மோகனன், நிர்வாகிகள் செல்வராஜ், சுப்பிரமணி, கிருஷ்ணமூர்த்தி, மார்க்சிஸ்ட் கிளை செயலர் ரமேஷ் உட்பட பலர் பேசினர்.

பின்னர், அச்சிறுப்பாக்கம் வட்டார வளர்ச்சி அலுவலருடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது, செப்.1-ம் தேதி முதல்அனைவருக்கும் பணி வழங்கப்படும் என தெரிவித்ததன் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x