Published : 25 Aug 2020 09:09 AM
Last Updated : 25 Aug 2020 09:09 AM
தமிழகத்தில் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணி தான் அடுத்து ஆட்சி அமைக்கும் என, முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட பாஜக மாநில செயற்குழு உறுப்பினர்கள் கூட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. முன்னாள்மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், மாநில வர்த்தகபிரிவு தலைவர் ராஜகண்ணன், திருநெல்வேலி மாவட்ட தலைவர் மகாராஜன், தென்காசி மாவட்ட தலைவர் ராமராஜா, தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் பி. ராமமூர்த்தி, தெற்கு மாவட்ட தலைவர் பி.எம். பால்ராஜ், கன்னியாகுமரி மாவட்ட தலைவர் தர்மராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் கட்சியின் மாநிலத் தலைவர் முருகன் உரையாற்றினார். கட்சியின் உட்கட்டமைப்புகளை வலுப்படுத்துதல், கரோனா கால பணிகள், வரும் சட்டப் பேரவை தேர்தலுக்கு தயாராவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
கூட்டத்துக்குபின் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் கரோனா காலத்தில் மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக பாஜக செயல்பட்டுள்ளது. வரும் 2021 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக அங்கம் வகிக்கும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும். தற்போது அதிமுக கூட்டணியில் இருக்கிறோம். தேர்தல் நேரத்தில் உரிய முடிவு எடுக்கப்படும். வரும் சட்டப்பேரவை தேர்தலில் பாஜக குறைந்தபட்சம் இரட்டை இலக்க எண்ணிக்கையிலான இடங்களில் போட்டியிடும். டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என்று தொடக்கத்திலிருந்தே தெரிவித்து வருகிறேன். திமுகவில் 90 சதவீதம் பேர் இந்துக்கள் என்று,அக்கட்சி பிரமுகர் ஆர்.எஸ். பாரதிசொல்லியிருக்கிறார். மக்கள் மத்தியில் விழிப்புணர்வு வந்தாகிவிட்டது.
தமிழகத்தின் இரண்டாம் தலைநகரமாக மதுரை வந்தால் சாலச்சிறந்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் விருப்பப்படி இரண்டாம் தலைநகரமாக மதுரையை உருவாக்க வேண்டும் என்றார் அவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT