Published : 25 Aug 2020 08:02 AM
Last Updated : 25 Aug 2020 08:02 AM
சங்ககிரி அருகே சிவனடியார் சரவணன் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் குறித்து சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என்றும், தற்கொலைக்கு காரணமான எஸ்.ஐ. அந்தோணி மைக்கேல் மீது கொலை வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சி நிறு வனர் அர்ஜூன் சம்பத் தெரிவித் துள்ளார்.
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள புளியம்பட்டி குண்டங்கல்காடு கிராமத்தைச் சேர்ந்த தறித்தொழிலாளியான சரவணன்(42), கடவுள் பக்தி காரணமாக கடந்த 20 ஆண்டுக்கு முன்பு சிவனடியாராக மாறினார். கடந்த 20-ம் தேதி சிவனடியார் சரவணன் தற்கொலை செய்து கொண்டார். தேவூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக தற்கொலை செய்து கொண்ட சிவனடியார் சரவணன் பேசிய வீடியோ சமூக வலை தளங்களில் வைரலானது. அந்த வீடியோவில் தனது இறப்புக்கு தேவூர் காவல் உதவி ஆய்வாளர் அந்தோணி மைக்கேல் தான் காரணம். அவர் அடித்ததால் தான் தற்கொலை செய்து கொண்டேன். எனது ஆன்மா அவரையும், அவரது குடும்பத்தினரையும் சும்மா விடாது என, குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக சங்ககிரி காவல் துணைக் கண்காணிப்பாளர் ரமேஷ் தலைமையிலான காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே நடந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்ககோரியும், சிவ னடியார் சரவணன் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கக்கோரியும் சேலம் மாவட்ட ஆட்சியரிடம், இந்து மக்கள் கட்சி சார்பில் அதன் நிறுவனர் அர்ஜூன் சம்பத் தலைமையிலானோர் நேற்று மனு அளித்தனர்.
அந்த மனுவில், காவல் உதவி ஆய்வாளர் அந்தோணி மைக்கேல் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வேண்டும். இந்த வழக் கினை நீதிமன்றத்தின் கண்காணிப் பில் சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும். சிவனடியார் சரவண னின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் மற்றும் ஒருவ ருக்கு அரசு வேலை வழங்க வேண் டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறிய தாவது: தேவூர் காவல் நிலையத் துக்கு உட்பட்ட புளியம்பட்டியில் ஆன்மிக பணியில் ஈடுபட்டு வந்த சரவணன் கிராம மக்களுக்கு அருள்வாக்கு சொல்லி வந்தார். அவர் மீது எந்த புகாரும் இல்லை.
காவல் உதவியாளர் தன்னை அடித்து துன்புறுத்தி அவமானப் படுத்தியதாகவும், கிராம மக்கள் முன்பும், தனது குடும்பத்தார் முன்பும் அவமானப்படுத்தியதால் தற்கொலை செய்து கொள்வதாக வும் தெரிவித்திருக்கிறார். இதை மரண வாக்குமூலமாக கருதலாம்.
சாமியார் தற்கொலை செய்து 5 நாட்களுக்குப் பின்னரே அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டது. பின்னர், காவல் துறையினர் இந்த வழக்கை தற்கொலை வழக்காக பதிவு செய்துள்ளனர். தற்போது இந்த வழக்கை கிடப்பில் போடவும் முயற்சி நடப்பதாகத் தெரிகிறது.
தற்கொலைக்கு முன்பு சரவ ணன் வெளியிட்டுள்ள வீடியோவை, மரண வாக்கு மூலமாக எடுத்துக் கொண்டு சாத்தான்குளம் சம்பவத் தில் சிபிசிஐடி விசாரணை மற்றும் சிபிஐ விசாரணை நடந்ததுபோல் சாமியார் சரவணன் வழக்கிலும் சிபிசிஐடி விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
மிரட்டல் புகார்
சரவணன் குடும்பத்தினருக்கு சிலரால் மிரட்டல் விடுக்கப்பட் டுள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே, அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். அந்தோணி மைக்கேல் மீது உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், தமிழகம் முழுவதும் இந்து மக்கள் கட்சி சார்பாக அறவழியில் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து சிவனடியார் சரவணன் கிராமமான தேவூர் குண்டங்கல்காட்டுக்கு அர்ஜூன் சம்பத் தலைமையிலான இந்து மக்கள் கட்சியினர் நேரில் சென்று அவரது உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT