Published : 24 Aug 2020 08:06 PM
Last Updated : 24 Aug 2020 08:06 PM
காப்பீடு புதுப்பிக்க காலக்கெடு நவ.30 வரை நீட்டிப்பட்டதால் தபால் துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, கோவில்பட்டி கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் பாண்டியராஜ் விடுத்துள்ள செய்திகுறிப்பு:
அஞ்சல் ஆயுள் காப்பீட்டு திட்டத்தில் சேர்ந்த காப்பீட்டுதாரர்கள் சில காரணங்களால் அதற்கான தவணைத்தொகையை உரிய காலத்தில் செலுத்தாமல் விட்டுவிட நேர்கிறது.
இந்த பாலிஸிகளை உரிய ஆவணங்களுடன் விதிமுறைகளுக்கு உட்பட்டு எப்போது வேண்டுமானாலும் புதுப்பிக்கொள்ளலாம்.
தற்போது இந்த விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டு, பாலிஸி தொடங்கி தவணை செலுத்துவதை நிறுத்திய முதல் மாதத்தில் இருந்து 5 ஆண்டுகள் நிறைவடைந்த காலாவதியான பாலிஸிகளை 2019-ம் ஆண்டு டிச.31-ம் தேதிக்கு பின்னர் புதுப்பிக்க இயலாது என அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் கரோனா ஊரடங்கு காரணமாக அந்த காலக்கெடு வரும் நவ.30-ம் தேதி வரை தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, பாலிஸிதாரர்கள் அரசு மருத்துவரிடம் உரிய உடல்நலச்சான்று பெற்று அருகே உள்ள அஞ்சலகத்தில் அதற்கான விண்ணப்பத்துடன் ஆக.31-ம் தேதிக்குள் பாலிஸிகளை புதுப்பித்து பயனடையலாம்.
மேலும், விபரங்களுக்கு கோவில்பட்டி 04632-220368, சங்கரன்கோவில் 04636-222313, தென்காசி 04633-222329 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம், என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT