Published : 24 Aug 2020 09:23 AM
Last Updated : 24 Aug 2020 09:23 AM
ஒரு பெண்ணின் திருமணம், வளைகாப்புக்கு நலங்குப் பாடல், குழந்தை பிறந்ததும் தாலாட்டுப் பாடல், சிறு வயதில் நிலாப் பாடல், இள வயதில் காதல் பாடல், துக்க நிகழ்வில் ஒப்பாரி என தமிழர்களின் வாழ்வு பிறப்பு முதல் இறப்பு வரை பாரம்பரிய இசையோடு ஒன்றியிருந்திருக்கிறது.
தற்போதைய நவீன கால கட்டத்தில் மேல்குறிப்பிட்ட நிகழ்வுப் பாடல்கள் வழக்கத்தில் இல்லாமல் போனாலும், அவ்வப் போது சில நாடகங்களும் திரைப்படங்களும் தமிழ் சார்ந்த இசையை ஊறுகாய் போலத் தொட்டுக் கொள்கின்றன.
ஒரு காலத்தில் பாரம்பரிய தோலிசைக் கருவிகளுக்கு அதிக முக்கியத்துவம் இருந்தது. தற் போது அவற்றின் பயன்பாடு வெகுவாகக் குறைந்து விட்டதாக தோலிசைக் கலைஞர்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.இந்நிலையில், மறையும் பாரம் பரிய தமிழிசைக் கருவிகளான பறை, தவில், மிருதங்கம் போன்ற தோலிசைக் கருவிகளை மீட்டெடுப் பதோடு, அவற்றை வாசிக்க கற்றுக் கொடுத்து இளைய தலைமுறையினரிடம் ஆர்வத்தை விதைத்து வருகிறார் மதுரை பழங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த இசை ஆசிரியர் எம். ஆண்ட்ரூஸ். தனியார் பள்ளிகளில் இசை ஆசிரியராகப் பணிபுரியும் அவர் இதுகுறித்து கூறியதாவது:
சிறுவயதில் இருந்தே கோயில், ஆலயங்களில் தோலிசைக் கருவிகள் வாசிப்பதை உன்னிப் பாகக் கவனிப்பேன். இதனால் இசைக் கருவிகள் மீது மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. மதுரை விளாச்சேரியில் உள்ள அரசு இசைக் கல்லூரியில் பயின்றேன்.
மிருதங்கம், பறை, தபேலா போன்ற கருவிகளை ஓரளவு வாசிக்கத் தெரிந்தாலும், தோலிசைக் கருவிகள் மீது ஏற்பட்ட காதலால் அவற்றைத் தேடித் தேடி சேகரிக்கத் தொடங்கினேன்.
ஒரு கட்டத்தில் டிரம்ஸ், தவில், பறை (தப்பு), உறுமி, பம்பை, உடுக்கை, கஞ்சிரா, கடசிங்காரி, டோல், தமுக்கு, மிருதங்கம் என நூற்றுக்கும் மேற்பட்ட தோலிசைக் கருவிகளைச் சேகரித்தேன். ஒரு சில கருவிகள் அழிவின் விளிம் பில் உள்ளதை அறிய முடிந்தது. பல நூற்றாண்டுகளாகத் தோலிசைக் கருவிகளை இசைத்து வந்துள்ளனர். இந்தக் கருவிகளை இளைய தலைமுறையினருக்கு கற்பிக்கும் பணியை, 22 ஆண்டு களாக மேற்கொண்டு வருகிறேன். தற்போது டிஜிட்டல் காலத்தில் கலைஞர்களே இன்றி கச்சேரிகள் நடக்கின்றன. என்னதான் டிஜிட்டல் இசைக் கருவிகள் வந்தாலும், அசல் கருவிகளில் இருந்து வரும் நாதத்தை அவற்றால் வழங்கவே முடியாது. படங்களில் நாட்டுப்புற இசைக் கருவிகளைக் கொண்ட ஓரிரு பாடல்களையாவது இசை அமைப்பாளர்கள் உருவாக் கினால் எங்களைப் போன்ற கலை ஞர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கும்.
எனக்கு அடையாளம் தந்த இந்தக் கலையை ஆர்வமுள் ளோருக்கு கற்றுத் தருகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT