Published : 23 Aug 2020 09:26 AM
Last Updated : 23 Aug 2020 09:26 AM
கள்ளக்குறிச்சி வடக்கு, தெற்கு மாவட்ட திமுகவிற்கு உட்பட்ட திருக்கோவிலூர் தொகுதி மட்டும் விழுப்புரம் மாவட்ட திமுகவில் நீடித்து வருகிறது.
விழுப்புரம் மாவட்டத்திலிருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரிக்கப் பட்டதால் அந்த மாவட்டத்தில் 5 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் 3 தொகுதிகள் திமுகவிடமும், 2 தொகுதிகள் அதிமுகவிடமும் உள்ளன.
அரசியல் கட்சிகளும் அதற் கேற்ற வகையில் நிர்வாகிகளை நியமனம் செய்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்ட அதிமுக செயலாளராக உளுந்தூர்பேட்டை அதிமுக எம்எல்ஏ குமரகுரு நியமிக்கப்பட்டார். இதையடுத்து அதிமுக ஒன்றிய செயலாளர்களும் நியமிக்கப்பட்டனர்.
இதே போன்று திமுக சார்பில் கள்ளக்குறிச்சி வடக்கு மற்றும் தெற்கு மாவட்டம் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. கடந்த 3 தினங்களுக்கு முன் கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக செயலாளர் அங்கையற்கண்ணி மாநில மகளிர் அணி துணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக சங்கரா புரம் எம்எல்ஏ உதயசூரியன் நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாவட்ட திமுகவில் கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.
இதே போல் தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராக ரிஷிவந்தியம் எம்எல்ஏ வசந்தம் கார்த் திக்கேயன் நியமிக்கப்பட்டுள்ளார். தெற்கு மாவட்ட திமுகவில் ரிஷிவந் தியம் மற்றும் கள்ளக்குறிச்சி தொகுதிகள் இடம் பெற்றுள்ளன.
ஆனால் திருக்கோவிலூர் தொகுதி மட்டும் கள்ளக்குறிச்சி வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுகவில் இடம் பெறவில்லை. விழுப்புரம் மத்திய மாவட்ட திமுகவிலே நீடித்து வருகிறது.
திருக்கோவிலூர் தொகுதி எம்எல்ஏ-யாக முன்னாள் அமைச் சர் பொன்முடி உள்ளார். இவரே விழுப்புரம் மத்திய மாவட்ட திமுக செயலாளராகவும் உள்ளார்.இதனால் அந்தத் தொகுதியை கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப் பாளர்களிடம் ஒப்படைக்க திமுக தலைமை தயக்கம் காட்டுகிறதா? என்ற பேச்சு திமுகவினரிடையே எழுந்துள்ளது.
இதுதொடர்பாக மாநில மகளிர் அணி துணைச் செயலாளர் அங்கையற்கண்ணியிடம் கேட்டபோது, "நிர்வாக வசதிக்காக தொகுதி வாரியாக பொறுப்பாளர் கள் நியமிக்கப்பட் டுள்ளனர். திருக்கோவிலூர் தொகுதிக்கு உட்பட்டதிருக்கோவிலூர் நகரம் மற்றும்13 ஊராட்சிகள் மட்டுமே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இடம் பெற்றுள்ளன. திருக்கோவிலூர் தொகுதியில் ஏனைய பகுதிகள் விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் இடம் பெற்றுள்ளன. இதனால் அத் தொகுதி விழுப்புரம் மாவட்டத்திலேயே நீடிக்கிறது" என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT