Published : 22 Aug 2020 07:49 AM
Last Updated : 22 Aug 2020 07:49 AM
கரோனா தடுப்பு பணியில் ஈடுபட் டுள்ள காவலர்களின் நலனைப் பேணும் வகையில், 12-ம் வகுப்பு முடித்து மேற்படிப்புக்கு காத் திருக்கும் காவல் துறையினரின் பிள்ளைகளுக்கு அவர்கள் விரும்பும் கல்லூரியில், விரும்பும் படிப்புகளில் சேர நடவடிக்கை மேற்கொண்டு கல்லூரிகளில் சீட் வாங்கிக் கொடுத்து சென்னை காவல் ஆணையர் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
கரோனா தொற்று தடுப்பு பணி யில் முன்கள வீரர்களாக காவல் துறையினரும் உள்ளனர். ஓய் வின்றி சுழற்சி முறையில் தொடர்ந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அவர்களால் தங்களது குடும்பத்தை சரிவர கவனிக்க முடியாத சூழ்நிலை, விடுப்பு எடுத்து தங்களது பிள்ளைகளின் மேல் படிப்புக்கான ஏற்பாடுகளையும் செய்ய முடியாத சூழ்நிலையில் உள்ளதாக கவலை தெரிவித்தனர்.
இதையறிந்த காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், போலீ ஸாரின் வாரிசுகளான பிளஸ்-2 முடித்து மேற்படிப்புக்கு செல்ல விரும்புபவர்களின் விபரங்களை கேட்டுத் தெரிந்து கொண்டார். பின் னர், அவர்கள் விரும்பும் கல்லூரி யில் விரும்பும் பாடப்பிரிவில் சேர்க்க தேவையான நடவடிக்கை களை மேற்கொண்டார். அதன்படி, கல்லூரியில் சேர்க்க அனுமதியளிக் கப்பட்ட 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை நேரில் அழைத்து கல்லூரி சேர்க்கை அனுமதி கடி தத்தை வழங்கி வாழ்த்து தெரிவித் தார்.
முன்னதாக காவல் ஆணை யரின் வேண்டுகோளை ஏற்று காவலர்களின் குடும்பத்தினருக்கு சீட் வழங்கிய கல்லூரி முதல்வர் களை வரவழைத்து கவுரவித்தார். எழும்பூர் ராஜரத்தினம் விளை யாட்டு மைதானத்தில் நேற்று முன் தினம் மாலை நடந்த இந்த நிகழ்ச்சி யில் கூடுதல் காவல் ஆணையர்கள் ஆர்.தினகரன், ஏ.அருண், கண்ணன் மற்றும் கல்லூரி நிர்வாகிகள், மாண வர்களின் குடும்பத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி முடிந்த பின்னர் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
இதுவரை 2,054 போலீஸார் கரோனா தொற்றால் பாதிக்கப்பட் டுள்ளனர். காவலர்களின் குடும்ப நலனுக்காக, அவர்களின் பிள்ளை கள் 12-ம் வகுப்பு முடித்து கல்லூரி செல்ல முயற்சித்தவர்களின் விபரங் களை சேகரித்து அவர்கள் விரும்பும் கல்லூரியில் சேர 220 பேருக்கு சிபாரிசு கடிதம் கொடுத்திருந்தோம். இதையேற்று முதல் கட்டமாக 52 பேருக்கு அட்மிஷன் வழங்கப்பட் டுள்ளது. மீதம் உள்ளவர்களுக்கும் இடம் கிடைக்கும். இது புது முயற்சி என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT