Published : 22 Aug 2020 07:32 AM
Last Updated : 22 Aug 2020 07:32 AM

திருவள்ளூர் அருகே பூதூரில் ‘கரோனா’ சிறப்பு சித்த மருத்துவ மையம்: மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார்

திருவள்ளூர் அருகே பூதூரில் செயல்படாதிருந்த தனியார் மருத்துவ கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ’கரோனா’ சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை, ஆட்சியர் மகேஸ்வரி நேற்று திறந்துவைத்து, சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட உள்ள சித்த மருந்துகளை பார்வையிட்டார்.

திருவள்ளூர்

திருவள்ளூர் அருகே பூதூரில் செயல்படாமல் இருந்த தனியார் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ‘கரோனா’ சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை, நேற்று ஆட்சியர் மகேஸ்வரி திறந்து வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இதன் ஒருபகுதியாக, திருவள்ளூர் அருகே சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில், பூதூரில் செயல்படாமல் இருந்த தனியார் மருத்துவக் கல்லூரி வளாகத்தில், நடைபெற்று வந்த கரோனா சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையம் அமைக்கும் பணி நிறைவு பெற்றது.

அந்த மையத்தை ஆட்சியர் மகேஸ்வரி நேற்று திறந்து வைத்தார். இந்நிகழ்வில், மாவட்ட சித்தமருத்துவ அலுவலர் (பொறுப்பு) ஈஸ்வரி, திருவள்ளூர் கோட்டாட்சியர் பிரீத்தி பார்கவி, சித்த மருத்துவர் பாண்டியராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது ஆட்சியர் தெரிவித்ததாவது:

100 படுக்கைகள் கொண்ட இந்த சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் அளி்கப்படும் சிகிச்சையின்போது உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைஅதிகரிக்கும் கபசுரக் குடிநீர், மூலிகை தேநீர், மூலிகை ஆரோக்கிய பானம் ஆகியவற்றோடு மிதமான நோய்க் குறி குணங்
களுக்கு ஏற்ப பிரமானந்த பைரவமாத்திரை, நிலவேம்பு குடிநீர், தாளிசாதி, சூரண மாத்திரை, திப்பிலி ரசாயணம் போன்றவை நோயாளிகளுக்கு வழங்கப்பட உள்ளன என்று தெரிவித்தார்.திருவள்ளூர் அருகே பூதூரில் செயல்படாதிருந்த தனியார் மருத்துவ கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ’கரோனா’ சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை, ஆட்சியர் மகேஸ்வரி நேற்று திறந்துவைத்து, சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட உள்ள சித்த மருந்துகளை பார்வையிட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x