Published : 20 Aug 2020 07:50 AM
Last Updated : 20 Aug 2020 07:50 AM

தமிழகத்தின் இரண்டாவது தலைநகரம் எது? - சமூக வலைதளங்களில் சூடு பறக்கும் விவாதங்கள்

மதுரை

மதுரையை 2-வது தலைநகராக்க வேண்டும் என அமைச்சர் ஆர்பி.உதயகுமார் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கடந்த வாரம் தீர்மானம் நிறைவேற்றினார். அதுமுதல், 2-வது தலைநகரம் மதுரையா? திருச்சியா? என்ற விவாதம் தொடங்கியுள்ளது.

உயர் நீதிமன்றக் கிளையை தொடங்கும்போது அது திருச் சிக்கா, மதுரைக்கா என பெரும் விவாதம் நடந்தது. இறுதியில் மதுரையில் உயர் நீதிமன்றக் கிளை அமைந்தது. அதன்பின் எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்துக்கு அறிவித்தபோதும் இதே சர்ச்சை வெடித்தது.

திருச்சி மண்டலப் பகுதியினர் தஞ்சாவூருக்குக் கொண்டு செல்ல முயற்சித்தனர். அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தென் மாவட்டங்களில் மிகப்பெரிய போராட்டங்கள் நடந் தன. கடைசியில், மதுரையில் எய் ம்ஸ் அமையும் என மத்திய அரசு அறிவித்தது.

எம்ஜிஆர் காலத்துக்குப் பின் மீண்டும் 2-வது தலைநகரம் பற்றிய விவாதம் தொடங்கியுள்ளது. தென் தமிழகத்தில் கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, தூத் துக்குடி, மதுரை, விருதுநகர், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் மாவட்டங்கள் உள் ளன. நிலப்பரப்பு அடிப்படையில் பார்த்தால் திருச்சி தமிழகத்தின் மையமாக உள்ளது. ஆனால், 2-வது தலைநகரம் தமிழகத்தின் மையத்தில் அமைய வேண்டிய அவசியம் இல்லை. காரணம், தமிழகத்தின் கடைக்கோடியில் இருக்கும் குமரி, தென்காசி மக்களும் வந்து செல்லும் வகை யில் அமைய வேண்டும்.

இதனால், மதுரையில் 2-வது தலைநகரம் அமைய வேண்டும் என , பொதுமக்களும் வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர். இதற்கு அமைச்சர்கள் செல்லூர் கே.ராஜூ, ஆர்பி.உதயகுமார் மற்றும் தென் மாவட்ட அமைச்சர்கள் ஆதரவு திரட்டி வருகின்றனர்.

திருச்சியில்தான் அமைய வேண்டும் என்று திருச்சி எம்பி திருநாவுக்கரசர், அமைச்சர் என்.நடராஜன் உள்ளிட்ட அப் பகுதி மக்கள் பிரதிநிதிகள் வலி யுறுத்தத் தொடங்கியுள்ளனர். ஏற்கெனவே எய்ம்ஸ், உயர் நீதிமன்றக் கிளை மதுரைக்கே சென்றுவிட்ட நிலையில் 2-வது தலைநகரத்தையாவது திருச்சியில் அமைக்க வேண்டும், என போர்க் கொடி தூக்கியுள்ளனர்.

ஒரே கட்சிக்குள் அமைச்சர்கள் 2-வது தலைநகர் விவகாரத்தைக் கையில் எடுத்து சர்ச்சை கிளம்பி யுள்ளதால் தமிழக அரசுக்கும், முதல்வர் கே.பழனிசாமிக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆனால், இதுவரை அரசோ, முதல்வரோ சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக் கவில்லை.

அதனால், 2-வது தலைநகரம் பற்றிய விவாதம் அடுத்த கட்டத் துக்கு நகர்ந்துள்ளது. நாளை மதுரையில் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் தலைமையில் தென் மாவட்ட தொழில் வர்த்தகர்கள் பங்கேற்கும் கலந்தாய்வுக் கூட்டம் நடக்கிறது. இதில், 2-வது தலைநகரம் அமைய வேண்டியதன் அவசியம் பற்றி விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே சமூக வலைதளங்களில் மதுரை, திருச்சி பகுதியைச் சேர்ந்த மக்கள், அவரவர் பகுதி சாதக அம்சங்கள் பற்றி தங்கள் கருத்துகளைப் பதிவு செய்து சூடுபறக்க விவாதிக்கின் றனர்.

திருச்சி தமிழகத்தின் மையத்தில் மத்திய மாவட்டங்களை உள்ளடக்கி உள்ளது. அதனால், திருச்சியை 2-வது தலைநகரமாக்கினால் தென் தமிழக மக்களின் சிரமம் தொடரத்தான் செய்யும் என்கின் றனர். அதேபோல், திருச்சிப் பகுதி யைச் சேர்ந்தவர்கள், மதுரையில் அமைந்தால் குறிப்பிட்ட 10 மாவட்ட மக்களுக்கு மட்டுமே பயன். பெரும்பாலான மாவட்டங்கள் பயன்பெற திருச்சியை 2-வது தலைநகராக்க வேண்டும், எனக் குறிப்பிடுகின்றனர்.

கரோனாவால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை மறைக்கவும், மக்களை திசைதிருப்பவும் அதி முக இப்பிரச்சினையைக் கையில் எடுத்துள்ளதாக மற்றொரு தரப் பினர் கூறுகின்றனர். இந்த விவாதத்துக்கு அரசு முற்றுப்புள்ளி வைக்காவிட்டால் எய்ம்ஸ் போல் மதுரை, திருச்சி மண்டல மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x