Published : 19 Aug 2020 01:53 PM
Last Updated : 19 Aug 2020 01:53 PM
கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு திமுக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக திமுக தலைமைக் கழகம் இன்று (ஆக.19) வெளியிட்டுள்ள அறிவிப்பு:
"திமுக நிர்வாக வசதிக்காகவும் கட்சிப் பணிகள் செவ்வனே நடைபெறவும், விழுப்புரம் தெற்கு (கள்ளக்குறிச்சி) மாவட்டத்தில் அடங்கியுள்ள சட்டப்பேரவைத் தொகுதிகள் பின்வருமாறு மாற்றி அமைக்கப்படுகிறது.
கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம்
சங்கராபுரம்
உளுந்தூர்பேட்டை
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டம்
ரிஷிவந்தியம்
கள்ளக்குறிச்சி (தனி)
இவ்வாறு பிரிக்கப்பட்டு சட்டப்பேரவைத் தொகுதிகளின் அடிப்படையில் கள்ளக்குறிச்சி வடக்கு, கள்ளக்குறிச்சி தெற்கு ஆகிய மாவட்டக் கழகங்கள் செயல்படும்.
மாவட்டப் பொறுப்பாளர் - பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நியமனம்
மேற்குறிப்பிட்டவாறு புதியதாக அமையப் பெற்ற மாவட்டங்களுக்குப் பின்வருமாறு மாவட்டப் பொறுப்பாளர் - பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்டம்
பொறுப்பாளர் - தா.உதயசூரியன், எம்எல்ஏ
பொறுப்புக்குழு உறுப்பினர்கள்
1. ரா.விஜயகுமார், கணையார் & அஞ்சல்
2. ஏ.ஜெ.மணிக்கண்ணு, நகர் கிராமம்
3. வி.எஸ்.ஆசிர்வாதம், எறையூர் & அஞ்சல்
4. க.நடுராஜன், எடுத்தவாய்நத்தம் & அஞ்சல்
5. இ.கமுருதீன், சங்கராபுரம் & அஞ்சல்
6. ர.ஜெயந்தி, ஆரம்பூண்டி & அஞ்சல்
7. மா.நாகராஜன், கொசப்பாடி காலனி
கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்டம்
பொறுப்பாளர் - வசந்தம் கார்த்திகேயன், எம்எல்ஏ
பொறுப்புக்குழு உறுப்பினர்கள்
1. கி.இராமூர்த்தி, நீலங்களம் & அஞ்சல்
2. கோ.அமிர்தவள்ளி, பேரால்
3. இரா.மூக்கப்பன், பெருவங்கூர் & அஞ்சல்
4. பெ.காமராஜ், கள்ளக்குறிச்சி
5. மு.லியாகத் அலி, கள்ளக்குறிச்சி
6. ம.கென்னடி, கள்ளக்குறிச்சி
7. இரா.சண்முகம், கள்ளக்குறிச்சி
8. மு.இராஜேந்திரன், வடமாமாந்தூர்"
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக மகளிர் அணி துணைச் செயலாளர் நியமனம்
திமுக தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிப்பில், "திமுக சட்டதிட்ட விதி 31-பிரிவு 3-ன்படி, திமுக மகளிர் அணி துணைச் செயலாளராக ஆ.அங்கயற்கண்ணி, தலைமைக் கழகத்தால் நியமிக்கப்படுகிறார். ஏற்கெனவே நியமிக்கப்பட்ட நிர்வாகிகளுடன் இவர் இணைந்து பணியாற்றுவார்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment