Published : 19 Aug 2020 11:38 AM
Last Updated : 19 Aug 2020 11:38 AM
தமிழ்நாட்டு வேலைவாய்ப்புகள் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கே வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மத்திய பிரதேசத்தில் அனைத்து அரசு வேலைவாய்ப்புகளும் அம்மாநில இளைஞர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் எனவும், அதற்கேற்ப சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும், அம்மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் நேற்று (ஆக.18) தெரிவித்திருந்தார். இதனை முக்கியமான நடவடிக்கை என தெரிவித்த அவர், மத்திய பிரதேச வளங்கள் அனைத்தும் அம்மாநில மக்களுக்கானவை என தெரிவித்தார்.
இந்நிலையில், தமிழ்நாட்டிலும் அதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டு சட்டமியற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக, ராமதாஸ் இன்று (ஆக.19) தன் ட்விட்டர் பக்கத்தில், "மத்திய பிரதேசத்தில் அனைத்து அரசு வேலைவாய்ப்புகளும் அம்மாநில மக்களுக்கு மட்டும் தான் வழங்கப்படும் என்று முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. தமிழ்நாட்டிலும் அதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டு, சட்டமியற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்!" என பதிவிட்டுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் அனைத்து அரசு வேலைவாய்ப்புகளும் அம்மாநில மக்களுக்கு மட்டும் தான் வழங்கப்படும் என்று முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. தமிழ்நாட்டிலும் அதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டு, சட்டமியற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்!
— Dr S RAMADOSS (@drramadoss) August 19, 2020
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT