Published : 18 Aug 2020 07:45 AM
Last Updated : 18 Aug 2020 07:45 AM
உதகை அருகே கெந்தோரையில் போலீஸார் திட்டியதால் மன உளைச்சலுக்கு உள்ளான விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
நீலகிரி மாவட்டம் உதகை அருகேயுள்ள கெந்தோரை புதுவீடு பகுதியை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவரது மகன் சீனிவாசன் (38). இருவரும் விவசாயம் செய்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் தேனாடுகம்பை பகுதியில் மது அருந்திவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் சீனிவாசன் சென்றதாக கூறப்படுகிறது. அங்கு தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸார், சீனிவாசன் மீது வழக்குபதிவு செய்து ரூ.15 ஆயிரம் அபராதமாக கேட்டதோடு, இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்ததாக கூறப்படுகிறது.
மன உளைச்சலுடன் இருந்த சீனிவாசன், நேற்று காலை அவரதுதோட்டத்தில் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண் டுள்ளார். தகவலின்பேரில் உடலைதேனாடுகம்பை போலீஸார் மீட்டு உதகை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோத னைக்காக அனுப்பி வைத்தனர்.
இதையறிந்த உறவினர்கள், மருத்துவமனை சவக்கிடங்கு பகுதியில் திரண்டு, போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
தகவலின்பேரில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கு விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT