Published : 17 Aug 2020 05:21 PM
Last Updated : 17 Aug 2020 05:21 PM
ஓமன் நாட்டில் சிறைபிடிக்கப்பட்டுள்ள திருநெல்வேலியை சேர்ந்த பொறியாளர் மணிராஜ் மாரியப்பன் என்பவரை மீட்க வலியுறுத்தி அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தனர்.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே மூளிக்குளத்தை சேர்ந்த டிப்ளமோ பொறியாளர் மணிராஜ் மாரியப்பன் (35) மற்றும் மேற்குவங்கம், உத்திர பிரதேசம் , மஹாராஷ்டிரா , கேரளா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் ஓமன் நாட்டில் அகமது சுல்தான் என்பவரது கப்பலில் வேலை செய்வதற்காக கடந்த பிப்ரவரி 1-ம்தேதி ஓமனுக்கு புறப்பட்டு சென்றிருந்தனர்.
கடந்த பிப்ரவரி 4-ம் தேதி ஓமனில் இருந்து சவுதி அரேபியாவுக்கு கப்பலில் சென்று கொண்டிருந்தபோது ஓமன் நாட்டு கடற்படையினர் இவர்களை சிறைபிடித்து சென்றனர்.
சலா என்ற தீவில் அவர்கள் ஓர் அறைக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். கடந்த 5மாதகாலமாக அடைபட்டுள்ள தங்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வாட்ஸ்அப் மூலம் விடியோ அனுப்பியிருந்தனர்.
இந்நிலையில் தனது கணவரை மீட்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மணிராஜ் மாரியப்பனின் மனைவி எம். வேல்மதி தனது இரு பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினருடன் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து கோரிக்கை மனு அளித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT