Published : 17 Aug 2020 09:51 AM
Last Updated : 17 Aug 2020 09:51 AM
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத் தூர் அருகே விவசாயத்தில் தொடர் நஷ்டத்தால் நாட்டுக்கோழி வளர்ப் பில் ஈடுபட்டு அதிக வருவாய் ஈட்டி வருகிறார் விவசாயி ஒருவர்.
முதுகுளத்தூர் அருகே காக் கூர் தேவர்புரத்தைச் சேர்ந்த விவசாயி பரம்பொருள் என்ற ஆர்.காளிமுத்து (65). 10 ஏக்கரில் நெல், மிளகாய் விவசாயம் செய்து வந்த இவர், விவசாயக் கூலி ஆட்கள் கிடைக்காததால் விவசாயத்தை குறைத்துக் கொண்டார். தற்போது 2 ஏக்கரில் மட்டும் விவசாயம் செய்து கொண்டு, மீதி நிலங்களை குத்தகைக்கு கொடுத்துள்ளார். 2 ஏக்கரிலும் போதிய வருமானம் கிடைக்காததாலும், தொடர்ந்து மழையின்றி விவசாயம் பொய்த்து போனதாலும், நாட்டுக்கோழி வளர்ப்பில் இறங்கினார்.
இதுகுறித்து விவசாயி ஆர்.காளிமுத்து கூறியதாவது: விவ சாயம் பொய்த்ததால் மாற்றுத் தொழிலாக நாட்டுக்கோழி வளர்ப் பில் இறங்கினேன். கடந்தாண்டு ஜூலையில் சிறியளவில் வீட்டின் அருகிலேயே 5 சென்ட் நிலத்தில் நாட்டுக்கோழி வளர்ப்பைத் தொடங்கினேன். ரூ.3 லட்சம் செலவில் 2 செட்டுகளை அமைத்து கடக்கனாத் மற் றும் ஒரிஜினல் நாட்டுக்கோழி ரகங்களை வளர்க்கிறேன். முதலில் 10 கோழிகளை வளர்க்கத் தொடங்கினேன். தற்போது நூற்றுக்கணக்கில் பெருகிவிட்டன.
வீட்டில் நாட்டுக்கோழிகளை வளர்ப்பதுபோல், பண்ணை யிலிருந்து காலை 6 மணிக்கு கோழிகளை திறந்துவிடுவேன். அவை அருகில் உள்ள காட்டுப் பகுதியில் மேய்ந்து விட்டு காலை 8 மணிக்கு பண்ணைக்குத் திரும்பிவிடும். பின்னர் பிற்பகலில்2 மணி நேரம் காட்டுப்பகுதியில் மேய்ந்துவிட்டு திரும்பும். இடைப்பட்ட நேரத்தில் பண்ணையில் கோழித்தீவனம், தண்ணீர் வைப்பேன்.
நான் வளர்க்கும் கோழிகளுக்கு அதிக கிராக்கி உள்ளது. பெரும் பாலான விவசாயிகள், பொது மக்கள் என்னிடம் வந்து வளர்ப்ப தற்காகவும், இறைச்சிக் காகவும் வாங்கிச் செல்கின்றனர். ஒரு கிலோ கோழி உயிருடன் ரூ. 500-க்கு விற் கிறேன். மாத வருவாய் ரூ. 10 ஆயிரம் வரை கிடைக்கிறது.
பிராய்லர் கோழி 45 முதல் 65 நாட்களிலும், பண்ணையில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகள் 3 மாதத்திலும் வளர்ந்து பலனுக்கு வந்துவிடும். ஆனால் ஒரிஜினல் நாட்டுக்கோழிகள் 7 முதல் 10 மாதத்தில் தான் பலனுக்கு வரும்.அதனால் செலவும் அதிகம்.
தற்போது கரோனா காலம் என்பதால் மக்கள் சூப் வைக்கவும், இறைச்சிக்காகவும் அதிகம் விரும்பி நாட்டுக் கோழிகளை வாங்கிச் செல்கின்றனர்.
நாட்டுக் கோழிகளை வளர்க்க இட வசதி, பொருளாதாரம், பொறுமை வேண்டும். இந்தத் தொழிலை மேலும் அபிவிருத்தி செய்ய வங்கிகள் கடன் வழங்கி ஊக்கப்படுத்தினால் நன்றாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT