Published : 13 Aug 2020 07:53 AM
Last Updated : 13 Aug 2020 07:53 AM
நடிகர் எஸ்.வி.சேகர் மீது அளிக்கப்பட்ட புகார் குறித்து எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து சட்ட நிபுணர்களிடம் கருத்து கேட்டுள்ளோம் என்று காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
சென்னை புதுப்பேட்டை ராஜரத்தினம் மைதான வளாகத்தில் ஆயுதப்படை காவலர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக புதிதாக அமைக்கப்பட்ட ஆவின் பாலகத்தை சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று மாலை திறந்து வைத்தார். இதையடுத்து அப்பகுதியில் மரக்கன்றுகளையும் நட்டார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சுதந்திர தினத்தையொட்டி சென்னையில் 15 ஆயிரம் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. தேசிய கொடியை அவமதித்ததாக நடிகர் எஸ்.வி.சேகர் மீது ஆன்லைனில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சட்ட நிபுணர்களிடம் கருத்து கேட்டுள்ளோம். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். சுதந்திர தின விழாவுக்கு வரும் பொதுமக்கள் தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT