Published : 12 Aug 2020 02:50 PM
Last Updated : 12 Aug 2020 02:50 PM
சாத்தான்குளம் சம்பவத்தில் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த அருண்பாலகோபாலன் உள்ளிட்ட 9 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தமிழக உள்துறைச் செயலர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:
மாற்றப்பட்ட அதிகாரிகள் முந்தைய பதவியுடன்:
1. காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் தூத்துக்குடி எஸ்.பி அருண்பாலகோபாலன் சென்னை சைபர் பிரிவு எஸ்பி-2 ஆக மாற்றப்பட்டுள்ளார்.
2. சென்னை சைபர் பிரிவு எஸ்பி-2 ஆக பதவி வகித்த ஓம் பிரகாஷ் மீனா சென்னை நிர்வாக ஏ.ஐ.ஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
3.சென்னை நிர்வாக ஏ.ஐ.ஜி சிபிசக்ரவத்தி சிபிசிஐடி சைபர் செல் எஸ்.பியாக மாற்றப்பட்டுள்ளார்.
4.சிபிசிஐடி சைபர் செல் எஸ்.பி ஜெயலட்சுமி தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
5.தமிழ்நாடு போலீஸ் அகாடமியின் எஸ்பியாக உள்ள ஜெயச்சந்திரன் தமிழ்நாடு கமாண்டோ படைப்பிரிவு எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
6. தமிழ்நாடு கமாண்டோ படைப்பிரிவு எஸ்பியாக இருந்த சி.ஷியாமலா தேவி சென்னை நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு சிறப்பு பிரிவு எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார்.
7. சென்னை நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு சிறப்பு பிரிவு எஸ்பியாக இருந்த கண்ணம்மாள் சென்னை, மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர்-2 ஆக மாற்றப்பட்டுள்ளார்.
8. சென்னை, மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர்-2 ஆக இருந்த தீபா சத்யன் அம்பத்தூர் துணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார்.
9. அம்பத்தூர் துணை ஆணையர் நிஷா சென்னை சைபர் பிரிவு எஸ்பி-2 ஆக மாற்றப்பட்டுள்ளார்.
இவ்வாறு உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகரன் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment