Published : 11 Aug 2020 05:07 PM
Last Updated : 11 Aug 2020 05:07 PM

கரோனாவால் உயிரிழந்த மதுரையைச் சேர்ந்த காவலர்: ரூ.16 லட்சம் நிதியுதவி வழங்கி நெகிழ வைத்த 2013-ம் ஆண்டு பணியில் இணைந்த சக காவலர்கள்

மதுரை

சென்னையில் பணிபுரிந்த மதுரையைச் சேர்ந்த காவலர் ஒருவர் கரோனாவுக்கு உயிரிழந்தநிலையில் அவரது பேட்ஜில் பணிபுரிந்த காவலர்கள் ரூ.16 லட்சம் நிதி திரட்டி உயிரிழந்த அந்த காவலரின் குடும்பத்திற்கு வழங்கியது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை ஒத்தக்கடை அம்மாபட்டியைச் சேர்ந்தவர் நாகராஜன் (வயது 32). இவர் சென்னையில் ஆயுதப்படைப்பிரிவில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார்.

கடந்த மாதம் 3-ம் தேதி இவருக்கு கரோனா பரிசோதனை செய்ததில் தொற்று உறுதி செய்யப்பட்டது. ஓமத்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட இவர், 6-ம் தேதி சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார்.

இவருக்கு திருமணமாகி மனைவியும், ஒன்றரை வயதில் குழந்தையும் உள்ளனர். நாகராஜன், 2013-ம் ஆண்டு பணியில் சேர்ந்துள்ளார்.

இவரது மரணத்தை அறிந்த அவரது 2013-ம் ஆண்டு பேட்ஜ் காவலர்கள், நாகராஜன் குடும்பத்திற்கு உதவ, வாட்ஸ் அப், இன்ஸ்ட்ராகிராம் போன்ற சமூக வலைதளங்கில் இந்த விவரத்தை பதிவிட்டு நிதி சேகரித்தனர்.

சேகரித்த நிதி ரூ.16 லட்சத்து 26 ஆயிரத்தை நாகராஜன் குடும்பத்தினர் வழங்கினர். 2013-ம் ஆண்டு பேட்ஜில் 12 ஆயிரம் போலீஸார் தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரிகின்றனர்.

இவர்களுடைய கருணையால் பணியின்போது கரோனாவால் இறந்த ஒரு காவலர் குடும்பத்திற்கு உடனடி நிதியுதவி கிடைத்துள்ளது. இதே பேட்ஜ் காவலர்கள்,

இதற்கு முன் இதேபோன்ற மரணங்களுக்கு அவர்களாகவே முன்வந்து சமூக வலைதளங்கில் ஒருங்கிணைந்து உதவிகளை செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x