Published : 11 Aug 2020 05:15 PM
Last Updated : 11 Aug 2020 05:15 PM
புதிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை குறித்த திமுக தரப்பு ஆட்சேபத்தை திமுக தலைவர் ஸ்டாலின் சார்பில் டிஆர்.பாலு அளித்தார். இதற்கு ட்விட்டரில் மத்திய அமைச்சர் பொக்ரியால் பதிலளித்துள்ளார். மொழித்திணிப்பு இல்லை என தமிழில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
இதுகுறித்து மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ட்விட்டர் பதிவு:
“புதிய கல்வி கொள்கை குறித்த கோரிக்கை மனுவை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் சார்பாக T.R பாலுஜி என்னிடம் சமர்ப்பித்தார். அவரிடம் எந்த மொழியும் எந்தவொரு மாநிலத்தின் மீதும் திணிக்கப்படாது என்பதை விளக்கினேன்.
மேலும் T.R பாலுஜியிடம், பயிற்று மொழியை தெரிவு செய்துகொள்வது அந்தந்த மாநிலங்களின் உரிமை என்பதையும் மற்றும் புதிய கல்வி கொள்கையின் முக்கிய அம்சங்கள் குறித்தும் அவரிடம் விளக்கினேன். நாம் ஒன்றுபட்டு புதிய இந்தியாவை உருவாக்குவோம்”. #AatmaNirbharBharat @mkstalin
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT