

கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து நாளை முதல் 120 நாட்களுக்குத் தண்ணீர் திறந்துவிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஆக.11) வெளியிட்ட அறிக்கை:
"கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து முதல்போக புன்செய் பாசனத்திற்குத் தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
விவசாயிகளின் வேண்டுகோளினை ஏற்று, கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டம், கெலவரப்பள்ளி நீர்த்தேக்கத்திலிருந்து முதல்போக பாசனத்திற்கு வரும் 12 ஆம் தேதி முதல் டிசம்பர் 9 ஆம் தேதி வரை 120 நாட்களுக்கு சுழற்சி முறையில் இரு பிரதானக் கால்வாய்களில் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.
இதனால் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வட்டத்தில் உள்ள 8,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மேலும், விவசாயிகள் நீரை சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்"
இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.