Published : 09 May 2014 09:03 AM
Last Updated : 09 May 2014 09:03 AM

தீர்ப்பை ஏற்கவில்லை; போராட்டம் தொடரும் - உதயகுமார் பேட்டி

அணு சக்திக்கு எதிரான மக்கள் இயக்கத்தின் ஒருங் கிணைப்பாளர் உதயகுமார் நாகர்கோவிலில் வியாழக் கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

`பூவுலகின் நண்பர்கள் அமைப்பு’ தொடுத்த வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இப்போது மத்திய, மாநில அரசுகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும் என்ற நம்பிக்கையில் மனுவை தள்ளுபடி செய்ததாக கூறியிருக்கிறார்கள். அரசாங் கத்தின் மீது இவ்வளவு நம்பிக்கை இருந்தது என்றால், எதற்காக இதற்கு முன் 15 பரிந்துரைகளை கூற வேண்டும். பரிந்துரைகளை அரசு நிறைவேற்றாதபோது, அது குறித்து விசாரணை நடத்து வதுதான் முறையாக இருக் கும். அதை விடுத்து மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.

அணு உலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போடப் பப்பட்ட வழக்குகளை, தமிழக அரசு தள்ளுபடி செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியிருந்தது. ஆனால், இதுவரை 101 வழக்குகளை தள்ளுபடி செய்ய வில்லை. அணு உலைக் கழிவு எங்கே கொட்டப் படுகிறது? அதற்கு எந்த வகை யில் பாதுகாப்பு செய்யப் பட்டுள்ளது என்ற சந்தேகங் களுக்கு விளக்கம் இல்லை.

கூடங்குளத்தில் இருந்து 900 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது என்கிறார்கள். ஆனால், அது எங்கு பயன் படுத்தப்படுகிறது என ஏன் சொல்லவில்லை? கூடங்குளம் அணு உலை திட்டத்தை தொடர்ந்து எதிர்ப்போம். வரும் 11-ம் தேதி இடிந்தகரை போராட்டம் தொடங்கி ஆயி ரமாவது நாள்.

அன்றைய நாளில் இடிந்த கரையில் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்துள் ளோம். அன்றைய தினம் அடுத்தகட்ட போராட்டம் குறித்து முடிவு எடுக்கப்படும், என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x