Published : 11 Aug 2020 11:26 AM
Last Updated : 11 Aug 2020 11:26 AM
கரோனா ஊரடங்கால் விவசாயிகள் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில் சாதி, மத, கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம், சிட்டிசன்ஸ் வாய்ஸ் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு, ஊழலுக்கு எதிரான இயக்கம், எய்ம்ஸ் தன்னார்வ அமைப்பு ஆகியோர் ஒன்றிணைந்து, ‘விவசாயிகள் -நுகர்வோர் நேரடி விற்பனை சந்தை’ திட்டத்தை தொடங்கினர்.
விவசாயிகளிடம் இருந்து விளைபொருட்களை பெற்று, அதை அடுக்குமாடி மற்றும் தனி குடியிருப்பு வளாகங்களுக்கு கொண்டுசென்று விற்பதே இத்திட்டத்தின் நோக்கம். தொடக்கத்தில் ஒரு வளாகத்தில் மட்டும் செயல்படுத் தப்பட்ட இத்திட்டம், தற்போது 23-க்கும் மேற்பட்ட அடுக்குமாடி, தனி குடியிருப்பு வளாகங்களுக்கு விரிவடைந்துள்ளது.
சாதி, மதம், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலளர் கந்தசாமி, ‘இந்துதமிழ்’ செய்தியாளரிடம் கூறிய தாவது: வெளி மார்க்கெட்டுகள், கடைகளை விட 30 சதவீதம்அளவுக்கு விலை குறைவாகவும்,தரமாகவும் காய்கறிகள் கிடைப் பதால் குடியிருப்புவாசிகளிடம் இத்திட்டத்துக்கு வரவேற்பு கிடைத் துள்ளது. எங்கள் சங்கத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்யும்விளை பொருட்களை, ஆறுமுக கவுண்டனூரில் உள்ள, எங்களது தலைமை அலுவலகத்துக்கு கொண்டு வந்து ஒப்படைப்பர். அதை, 2 டன், 3 டன் என பிரித்து, அன்றைய தேதிக்கு ஒதுக்கப்பட்ட அடுக்குமாடி மற்றும் தனி குடியி ருப்பு வளாகங்களுக்கு சென்று, விற்பனை செய்வோம்.
தினசரி 84 வகையான காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு செல்கிறோம்.
வாரத்துக்கு சராசரியாக 80 டன் காய்கறிகள் மேற்கண்ட நேரடி விற்பனை மூலம் நுகர்வோருக்கு விற்கப்படுகின்றன. நுகர்வோருக்கு தேவைப்படுவதால், மொத்த மார்க்கெட்டுகளில் இருந்தும் சில பொருட்களை வாங்கி விற்பனை செய்கிறோம். விற்பனைத் தொகை விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு விடும்.
மேலும், 4 அடுக்குமாடி மற்றும் தனி குடியிருப்பு வளாகங்களில் தினசரி 10-க்கும் மேற்பட்ட கீரை வகைகள் விற்பனைக்காக கொண்டு செல்லப்படுகின்றன. அங்கு வியாபாரிகள் இருக்கமாட்டார்கள். தங்களுக்கு தேவையான கீரையை மக்களே எடுத்துக் கொண்டு, அதன்விலைக்கு ஏற்ற தொகையை அங்குள்ள பெட்டியில் வைத்துவிடுவர். ‘ஹானஸ்ட் ஷாப்பிங்’ என்ற இத்திட்டத்தையும் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சிட்டிசன்ஸ் வாய்ஸ் நுகர்வோர்பாதுகாப்பு அமைப்பு தலைவர்சி.எம்.ஜெயராமன் கூறும்போது, "விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்கும் வகையில் இத்திட்டத்தை, மேலும் பல்வேறு அடுக்குமாடி, தனி குடியிருப்பு வளாகங்களுக்கு விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சத்தான நவதானியங்கள் இதேமுறையில் விற்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT