Last Updated : 07 Aug, 2020 03:28 PM

 

Published : 07 Aug 2020 03:28 PM
Last Updated : 07 Aug 2020 03:28 PM

கேரளாவில் கனமழை: முல்லைப் பெரியாறு அணையில் ஒரேநாளில் 7அடி நீர்மட்டம் உயர்வு

குமுளி

கேரளாவில் பருவமழை தீவிரமடைந்துள்ளதால் முல்லைப் பெரியாறு அணைக்கு 17ஆயிரத்து 746 கனஅடிநீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால், அணையில் ஒரே நாளில் 7அடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

தென்மேற்கு பருவமழை ஜூனில் துவங்குவது வழக்கம். இந்த ஆண்டு பல வாரங்களுக்குப் பிறகே பருவகாலம் துவங்கியது. குறிப்பாக கடந்த இரண்டு வாரங்களாக முல்லைப்பெரியாறு அணை பகுதியில் தொடர் சாரல் மழை பெய்து வருகிறது.

நீர்ப்பிடிப்புப்பகுதியின் துவக்க இடமான முல்லைக்கொடி, அணை, குடியிருப்பு, படகுகுழாம், ஆனவச்சால் உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து வெகுவாய் அதிகரித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு விநாடிக்கு 4ஆயிரத்து 784கனஅடி நீர் வரத்து இருந்தது. பின்பு 6ஆயிரத்து 585ஆக அதிகரித்தது. நேற்று முன்தினம் விநாடிக்கு 6ஆயிரத்து 956 கனஅடியாக நீர்வரத்து உயர்ந்தது. நேற்று விநாடிக்கு 17ஆயிரத்து 746 கனஅடியாக அதிகரித்தது.

அணையின் நீர்மட்டம் நேற்று 123 அடிஇருந்த நிலையில், இன்று ஒரே நாளில் 7அடி உயர்ந்து 130 அடியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விநாடிக்கு 1200 கனஅடிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. எனவே பெரியாறு ஆற்றங்கரையில் உள்ளவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யாரும் தேவையின்றி ஆற்றில் இறங்கக்கூடாது என்று அபாய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வைகை அணையைப் பொறுத்தளவில் நீர்வரத்து 921 கனஅடியாகவும், வெளியேற்றம் 72 அடியாகவும் உள்ளது. நீர்மட்டம் 32.60அடியாக இருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x