Published : 25 Sep 2015 09:14 AM
Last Updated : 25 Sep 2015 09:14 AM

புனித ஹஜ் யாத்திரையின்போது விபத்து நடந்தது எப்படி?- நேரில் கண்டவர் விளக்கம்

புனித ஹஜ் யாத்திரையின்போது மினா நகரில் நேற்று நடந்த விபத் தில் 700-க்கும் மேற்பட்டோர் இறந்த னர். இந்த விபத்து நடந்தது எப்படி என்பது குறித்து நேரில் கண்டவர் விளக்கம் அளித்துள்ளார்.

ஹஜ் யாத்திரையின்போது நடந்த விபத்தை நேரில் பார்த்த இந்தியா ஃப்ரடெர்னிட்டி ஃபோரம் என்ற அமைப்பின் உறுப்பினர் அமிர் சுல்தான், ‘திஇந்து’விடம் கூறிய தாவது:

இந்த ஆண்டு ஹஜ் பயணி களாக பல்வேறு நாடுகளில் இருந்து சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மெக்காவுக்கு வந்தனர். இந்த புனித பயணத்தின் முக்கிய நிகழ்வாக கருதப்படும் ‘சாத்தான் மீது கல் எறிதல்’ என்ற நிகழ்வு ஜம்ரத் என்ற இடத்தில் நடக்கும். இந்த நிகழ்வில் கலந்துகொள்ள மினாவில் இருந்து புறப்பட்டு செல் வார்கள். மினாவுக்கும் ஜம்ரத்துக் கும் இடையே 6 கி.மீ தூரம் உள்ளது. இந்த இடத்துக்கு செல்வதற்கு 6 வகையான சாலைகள் உள்ளன.

அதில் 204-ம் எண் சாலையில் நடந்து செல்பவர்கள் செல்வார்கள். மற்றொரு பாதையில் ரயில் மூலம் வருவார்கள். இந்த இரண்டு பாதை களில் இருந்தும் ஒரு இடத்தில் வெளியேறும் வகையில் வழி அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலை யில், வியாழக்கிழமை மதியம் லட்சக்கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் இந்த வழியில் வந்த தால், பெரும் கூட்டம் ஏற்பட்டது. பலர் இதில் சிக்கிக்கொண்டனர். என்ன செய்வதென்று தெரியாமல் மக்கள் தவித்தனர். சுமார் 40 டிகிரி செல்ஷியஸ் அளவில் வெயில் சுட்டெரித்ததால், ஏராளமானோர் மயங்கி விழுந்தனர். ஒருவர் மீது ஒருவராக அடுக்கடுக்காக விழுந் தனர்.

இதில் ஏற்பட்ட நெரிசலில் 700-க்கும் மேற்பட்டோர் இறந் துள்ளதாக துபாய் அரசு தெரிவித் துள்ளது. ஆனால், இந்த பெரும் துயர சம்பவத்தில் இறந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். நூற்றுக்கணக்கானவர்கள் மூச்சுத் திணறலால் கீழே விழுந்து காயமடைந்துள்ளனர். சவூதி அரேபிய அரசு ராணுவம், போலீஸார், தீயணைப்பு வீரர்கள், தன்னார்வ தொண்டு அமைப்பினர் அவர் களை மீட்கும் பணியில் ஈடு பட்டனர். பலியானவர்களில் ஆப்பிரிக்கா மற்றும் வளைகுடா நாட்டை சார்ந்தவர்களே அதிகம். இந்தியர்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x