Published : 06 Aug 2020 10:17 AM
Last Updated : 06 Aug 2020 10:17 AM

பிற மாவட்ட கல்லூரிகளில் பட்டப்படிப்பு சேர்க்கைக்கு செல்ல இ-பாஸ் கிடைக்காமல் மாணவர்கள் தவிப்பு

மதுரை

தமிழகத்தில் கல்லூரி மாணவர் சேர்க்கை தொடங்கி நடந்து வரும் நிலையில், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு இ-பாஸ் கிடைக்காததால் கல்லூரிகளில் சேர முடியாமல் தவிக்கின்றனர்.

கரோனா பரவலைத் தடுக்க தமிழகத்தில் கடந்த மார்ச் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. மக்கள் சொந்த மாவட்டங்களை விட்டு அடுத்த மாவட்டங்களுக் குச் செல்வதற்கு இ-பாஸ் நடை முறையே தொடர்ந்து பின்பற்றப் படுகிறது. பொதுப் போக்குவரத்து இல்லாவிட்டாலும் மக்கள், தங்கள் சொந்த வாகனங்களில் அத்தியாவசிய, அவசரத் தேவைகளுக்குச் செல்வதற்கு இ-பாஸ் எடுக்கத் தயாராக இருந் தும் மாவட்ட நிர்வாகங்கள் அனு மதிப்பது இல்லை. தற்போது மரணம், அவசர மருத்துவம், திருமணங்களுக்கு மட்டுமே ஆவணங்களின் அடிப்படையில் இ-பாஸ் வழங்கப்படுகிறது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளி யான நிலையில் மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கான முயற் சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஆன்லைன் விண்ணப்பம் மூலம் சேர்க்கை நடத்தப்படும் என அரசு, தனியார் கல்லூரிகள் அறிவித்தாலும் அதில் சில நடைமுறைச் சிக்கல்கள் இருப் பதை அதிகாரிகள் கருத்தில் கொள் ளவில்லை. கலை, அறிவியல், பொறியி யல், சட்டம், செவிலியர், கல்லூரி களில் அரசு ஒதுக்கீட்டைத் தவிர நிர்வாக ஒதுக்கீட்டுக்கான சீட்கள் அனைத்தும் மாணவர்களை நேரில் அழைத்தே சேர்க்கைகள் நடத்தப்படுகின்றன. நிர்வாக ஒதுக்கீடாக இருந்தாலும் சில கல்லூரிகள், மாணவர்களின் தரத்தை அறிய நேர்முகத் தேர்வு, எழுத்துத் தேர்வுகளை நடத்துகின்றன. இந்நிலையில், தமிழகம் முழுவதும் மாணவர்கள் ஒரு மாவட்டத்திலிருந்து மற்ற மாவட்டங்களுக்கு இ-பாஸ் கிடைக் காமல் செல்ல முடியவில்லை.

மாணவர் சேர்க்கைக்குச் செல்வ தாக இ-பாஸ் விண்ணப்பத்தில் சான்றிதழை இணைத்தாலும் நிராகரிக்கப்படுகிறது. இதனால், மாணவர்கள் செய்வதறியாது தவிக்கின்றனர். சில கல்லூரி நிர்வா கங்கள் மாணவர் சேர்க்கைக்கு அழைத்துள்ளதாக கடிதம் அனுப் பினாலும் சோதனைச் சாவடிகளில் பெரும்பாலான போலீஸார் அந்தக் கடிதத்தை ஏற்பதில்லை. இதனால், மாணவர்கள் கல்லூரிகளில் சேர முடியாமல் தவிக்கின்றனர். எனவே, மாணவர்கள் நலன் கருதி இ-பாஸ் வழங்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x