Published : 04 Aug 2020 12:55 PM
Last Updated : 04 Aug 2020 12:55 PM

யூபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியானது: அகில இந்திய அளவில் 7-வது இடத்தில் தமிழக மாணவர் 

சென்னை

அகில இந்திய குடிமைப் பணி தேர்வு என்றழைக்கப்படும் யூபிஎஸ்சி தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. கரோனா பாதிப்பால் நேர்முகத் தேர்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் கடந்த வாரம் நேர்முகத் தேர்வும் முடிந்து முடிவுகள் வெளியாகியுள்ளது.

ஆட்சிப் பணியின் முக்கியத் தேர்வுகளான ஐஏஎஸ் (Indian Administrative Service), ஐஎஃப்எஸ் (Indian Foreign Service), ஐபிஎஸ் (Indian Police Service) பணிகளுக்கு கடந்த 2019-ம் ஆண்டுக்கான ஆட்சிப்பணி தேர்வுகள் (முதல் நிலை, முதன்மைத் தேர்வுகள்) நடந்தன. நேர்முகத் தேர்வுகள் பிப்ரவரி தொடங்கி ஏப்ரல் வரை நடக்க இரு

இதில் நேர்முகத் தேர்வு முடியும் இறுதித் தருவாயில் கரோனா ஊரடங்கால் ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்த ஊரடங்கு காரணமாக நேர்முகத் தேர்வின் இறுதிப் பகுதி நடக்காமல் ஒத்திவைக்கப்பட்டது. ஒருவழியாக கடந்த ஜூலையில் இறுதிப் பகுதி நேர்முகத் தேர்வும் முடிந்தது.

இந்நிலையில் ஆட்சிப் பணி தேர்வுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன. இதில் மொத்தம் 829 பேர் தேர்வாகியுள்ளனர். தேர்வானவர்களில் பொதுப் பிரிவில் 304 பேர், பொருளாதார இட ஒதுக்கீட்டுப் பிரிவில் 78 பேர், ஓபிசி பிரிவில் 251 பேர், பட்டியலினப் பிரிவில் (129+67) 196 பேர் என 829 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.

இதில் தமிழகத்தில் முதலிடமும், அகில இந்திய அளவில் கணேஷ்குமார் பாஸ்கர் தேர்வாகியுள்ளார். அவரது சொந்த ஊர் நாகர்கோவில் ஆகும்.

தேர்ச்சி விகிதத்தில், ஐஏஎஸ் தேர்வானவர்கள் (பொதுப் பிரிவு 72, பொருளாதார இட ஒதுக்கீடு 18, ஓபிசி 52 பட்டியலினம் (25+13)) மொத்தம் 180 பேர். ஐஎஃப்எஸ் தேர்வானவர்கள் (பொதுப்பிரிவு 12, பொருளாதார இட ஒதுக்கீடு 02, ஓபிசி 06, பட்டியலினம் (3+1)) மொத்தம் 24 பேர்.

ஐபிஎஸ் தேர்வானவர்கள் (பொதுப்பிரிவு 60, பொருளாதார இட ஒதுக்கீடு 15, ஓபிசி 42, பட்டியலினம் (23+10) மொத்தம் 150 பேர். இதுதவிர குரூப் ஏ-வில் தேர்வானவர்கள் 438 பேர் (ஐஆர்எஸ், ஐஎஸ், போஸ்டல், அக்கவுண்ட்ஸ் ஆடிட், பாதுகாப்பு,) குரூப் பி -ல் தேர்வானவர்கள் 135 பேர் ( டெல்லி, அந்தமான் நிக்கோபார், புதுச்சேரி ஐஏஎஸ், ஐபிஎஸ் சர்வீஸ்).

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x