Published : 30 Jul 2020 08:10 AM
Last Updated : 30 Jul 2020 08:10 AM
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை ஆகஸ்ட் 5-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்காக இந்தியாவின் முக்கிய புனித தலங்களில் இருந்து புனிதநீர் மற்றும் புனித மண் ஆகியவற்றை சேகரித்து இந்து அமைப்பினர் அனுப்பி வருகின்றனர்.
இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் இருந்து புனித நீர், புனித மண் ஆகியவை நேற்று சேகரிக்கப்பட்டது. பின்னர் அவற்றை அயோத்திக்கு அனுப்பி வைக்கும் நிகழ்வு நடந்தது. நிகழ்ச்சிக்கு விஷ்வ இந்து பரிஷத் மாவட்ட தலைவர் குமரேசதாஸ் தலைமை வகித்தார். மேலும், அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிக்காக குமரி பகவதியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT