செங்கல்பட்டு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் ஜான்லூயிஸ்.
செங்கல்பட்டு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் ஜான்லூயிஸ்.

கரோனா நோயாளிகளுக்கான வசதிகள்: செங்கை அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு

Published on

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்கான வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிஸ் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கரோனாவார்டுகளில் சிகிச்சை பெறுவோருக்கு தரமற்ற உணவு வழங்கப்படுகிறது, கழிப்பறைகள் பராமரிக்கப்படுவதில்லை, முறையாக குடிநீர்விநியோகிப்பதில்லை, மருத்துவர்கள் பாராமுகமாக நடக்கின்றனர் என ஏராளமான புகார்கள் தெரிவிக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் ஆட்சியர் ஜான்லூயிஸ் செங்கல்பட்டு அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். மேலும் அங்கு அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை வார்டையும் பார்வையிட்டார்.

பாதிக்கப்பட்ட நபர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள், வழங்கப்படும் உணவு வகைகள் உள்ளிட்ட விவரங்கள் குறித்தும் கேட்டறிந்தார். கரோனா பரிசோதனைக்காக அமைக்கப்பட்டுள்ள ஆய்வகத்தையும் அவர்பார்வையிட்டார்.

இந்த ஆய்வில், செங்கல்பட்டு காவல் துறை கண்காணிப்பாளர் (பொறுப்பு) பாஸ்கர், ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குநர் எஸ்.எஸ்.குமார், திட்ட இயக்குநர் செல்வகுமார், செங்கல்பட்டு அரசுமருத்துவமனை முதல்வர் சாந்திமலர் ஆகியோர் உடன் இருந்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in