Published : 26 Jul 2020 01:05 PM
Last Updated : 26 Jul 2020 01:05 PM
காரைக்காலில் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள பொதுப்பணித்துறை ஊழியர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று குடும்பத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காரைக்கால் பொதுப்பணித்துறையில் வவுச்சர் ஊழியர்களாக 126 பேர் கடந்த 10 ஆண்டுகளாக சாலை பராமரிப்பு, தண்ணீர் தொட்டி பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மாதத்தில் 16 நாட்கள் மட்டுமே வேலை, ரூ.3,200 ஊதியம் வழங்கப்படுகிறது. இந்த ஊதியத்தைக் கொண்டு குடும்பம் நடத்த இயலாது, கரோனா தடுப்பு நடவடிக்கைகளால் எந்தவித வருமானமும் இல்லாத நிலை உள்ளது. எனவே, புதுச்சேரி அரசு தங்களின் வாழ்வாதார நிலையைக் கருத்தில் கொண்டு மத்திய அரசின் சட்டக்கூலியான நாள் ஒன்றுக்கு ரூ.648 வழங்க வேண்டும், மாதம் முழுவதும் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர் சங்கத்தினர் சார்பில் கடந்த 22-ம் தேதி தொடர் வேலைநிறுத்தப் போரட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் இன்று (ஜூலை 26) காரைக்காலில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலகம் அருகில் குடும்பத்துடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT