Published : 26 Jul 2020 08:26 AM
Last Updated : 26 Jul 2020 08:26 AM

மகளை கொலை செய்ததாக தீயணைப்பு வீரர் கைது

உத்திரமேரூர்

உத்திரமேரூரில் மகள் கொலை செய்யப்பட்டது தொடர்பாக தீயணைப்புத் துறையில் பணி செய்யும் அவரது தந்தையை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

உத்திரமேரூர் பேரூராட்சி, வெங்கட்டையா பிள்ளைத் தெருவைச் சேர்ந்தவர் பாலாஜி. இவர் உத்திரமேரூர் தீணைப்புத் துறையில் பணியாற்றி வந்தார். உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மையம் மூலம் கேட்பாரற்று கிடக்கும் சிலைகளை கண்டறிந்து அதன் வரலாற்றை பத்திரிகைகள் வாயிலாக பொதுமக்களுக்கு அறிவித்து வந்தார். இவரது மனைவி ஜெயந்தி. இவர் மாதர் சங்கம் ஒன்றில் தலைவியாக உள்ளார்.

இவர்களது மகள் செந்தாரகை(24). இவருக்கும் உத்திரமேரூர் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் கடந்த 2 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. ஆனால், அவருடன் சேர்ந்து வாழ மறுத்து தாய் வீட்டுக்கே வந்துவிட்டதாக தெரிகிறது.

இந்நிலையில், கடந்த 8-ம் தேதியன்று உத்திரமேரூரில் தனது தாய் வீட்டில் செந்தாரகை மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது சடலத்தை அடக்கம் செய்ய முயன்றபோது, உறவினர்கள் சிலர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து செந்தாரகையின் சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரேதப் பரிசோதனையில் அவர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. இதைத்தொடர்ந்து செந்தாரகையின் தந்தை பாலாஜியை உத்திரமேரூர் போலீஸார் கைது செய்தனர்.

இதுகுறித்து மதுராந்தகம் டிஎஸ்பி மகேந்திரன் கூறும்போது, “செந்தாரகை திருமணம் செய்துகொண்ட பிறகு கணவருடன் சேர்ந்து வாழவில்லை. அவரை கணவனுடன் சேர்ந்து வாழுமாறு பெற்றோர் வலியுறுத்தியுள்ளனர். அவர்ஏற்க மறுத்ததால் தகராறு ஏற்பட்டது.இதில் இவர் கொலை செய்யப்பட்டுள்ளார். பின் தலையை சுவற்றில் மோதி கழுத்தை இறுக்கி கொலை செய்ததாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து நடந்த விசாரணையில் இக்கொலைக்கு காரணமான பெண்ணின் தந்தை பாலாஜியை கைது செய்துள்ளோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x